Periods
Periods

யாருக்கெல்லாம் ஒரு மாதத்தில் இரண்டு முறை பீரியட்ஸ் ஆகும் தெரியுமா?

Published on

பொதுவாக பெண்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒருமுறை என்ற கணக்கில்தான் பீரியட்ஸாகும். ஆனால், யாருக்கெல்லாம் ஒரு மாதத்திற்கு இரண்டு முறை ஆகும் தெரியுமா?

மாதவிடாய் சுழற்சி என்பது 21 முதல் 35 நாட்களுக்குள் இருக்கும். சிலருக்கு 28 நாட்கள் அல்லது 32 நாட்கள் வித்தியாசத்தில் பீரியட்ஸாகும். ஆனால், சிலருக்கு இந்த எந்த கணக்கும் இல்லாமல், இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என சீரற்ற முறையில் வருவதும் உண்டு. இதுபோல, யார் யாருக்கெல்லாம் பீரியட்ஸாகும்? இதனால் ஆபத்து ஏற்படுமா? போன்றவற்றைப் பார்ப்போம்.

பொதுவாக மாதவிடாய் தொடங்கும் ஆரம்பக் காலத்தில் இதுபோன்ற சீரற்ற மாதவிடாய் ஏற்படும். அதாவது, ஒரு மாதத்திற்கு இரண்டு முறை ஆகலாம். 10 முதல் 15 நாட்கள் வரைக்கூட இருக்கும். அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் ஆகலாம். இதற்கு நாம் கவலைக்கொள்ள தேவையில்லை. ஏனெனில், இந்த சமயத்தில் ஹார்மோன் அளவில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். ஆகையால், மாதவிடாய் தொடங்கும் ஆரம்பக்கட்டதிலிருந்து சீரான மாதவிடாய் காலம் வர 3 முதல் 4 வருடங்கள் ஆகலாம்.

சில சமயம் தைராய்டு பிரச்னைகளும் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும். ஏனெனில், தைராய்டு உடலில் உள்ள ஹார்மோன் மாற்றத்தை உண்டு செய்யும். இது உடல் வெப்பநிலை மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. 

மெனோபாஸ் காலம் என்பது மாதவிடாய் காலம் முடியும் நேரம். அதற்கு பத்து வருடங்களுக்கு முன்னர் உள்ள காலத்தை பெரிமெனோபாஸ் காலம் என்று சொல்வார்கள். அந்த சமயங்களில் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவது சகஜம்தான். நடுத்தர வயதில், குறைவான ரத்தப்போக்கு, அதிகமான ரத்தப்போக்கு, சுத்தமாக வராமல் இருப்பது போன்றவை ஏற்படும்.

சிலருக்கு இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு Fibroid (நார்த் திசுக் கட்டிகள்) கட்டிகள் காரணமாகலாம். இது சிலசமயம் பெரியளவாகும்போது புற்றுநோய் கட்டியாகவும் மாறலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகையால், மருத்துவரை அணுகுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
எலும்புகளை வலுப்பெறச் செய்யும் தாம்பூலம் தரிக்கும் வழக்கம்!
Periods

பொதுவாக பீரியட்ஸை தள்ளிப்போட மாத்திரைகள் எடுத்துக்கொள்ளக் கூடாது. மீறி நீங்கள் தொடர்ந்து எடுத்துவிட்டு, திடீரென்று எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், உடலில் ஹார்மோன் இடையூறு மற்றும் இரத்தப்போக்கு மாற்றங்களை உண்டு செய்யலாம். ஒரு மாதத்திற்கு இரண்டு முறை பீரியட்ஸ் ஆகலாம்.

 இது இரண்டு மாதங்கள் இருக்கலாம். ஒருவேளை தொடர்ந்து பல மாதங்கள் இருந்தால், மருத்துவரை அணுகலாம்.

logo
Kalki Online
kalkionline.com