யாருக்கெல்லாம் உடலில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் தோன்றும் தெரியுமா?

ஸ்ட்ரெச் மார்க்ஸ்
ஸ்ட்ரெச் மார்க்ஸ்https://puresense.co.in
Published on

பொதுவாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்கள் உடல் எடை கூடும்போதும், குறையும்போதும்  உடலில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் தோன்றும். ஸ்ட்ரெச் மார்க்ஸ் என்பது சருமம் வேகமாக நீளும்போதும் அல்லது சுருங்கும்போதும் உருவாகும் ஒரு வகையான வடு. அவை சருமத்தில் கோடுகளாக தோற்றமளிக்கும். உடலின் இயல்பான சருமத்தை விட வித்தியாசமான நிறம் மற்றும் அமைப்பில் காணப்படும்.

யாருக்கெல்லாம் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரும்?

கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு விரைவாக உடல் எடை அதிகரிக்கும். அவர்களின் வயிறு பெரிதாக ஆரம்பிக்கும் போது மற்றும் குழந்தை பிறந்த  வயிறு சுருங்கும்போதும் இவை தோன்றுகின்றன. குறிப்பாக, வயிறு, மார்பகங்கள் மற்றும் தொடைகளில் சருமம் விரைவாக ஸ்ட்ரெச் ஆகிறது.

டீனேஜர்கள்: டீன் ஏஜ் பருவத்தின்போது குறிப்பாக சிறுமிகள் பருவமடையும்போது உடல் வேகமாக வளர்கிறது. அதிகமான உடல் எடை கூடும்போது இவை தோன்றும்.

பாடி பில்டர்கள்: இவர்களது உடலில் தசை அதிகரிக்கும்போது ஸ்ட்ரெச் மார்க்ஸ் தோன்றும்.

உடல் எடை கூடும்போதும் குறையும்போதும்: திடீரென வேகமாக உடல் எடை சிலருக்குக் கூடும். சிலர் தன்னுடைய எடையை குறைக்கும்போதும் ஸ்ட்ரெச் மார்க்குகள் தோன்றும்.

மரபணு: சிலருக்கு மரபணு காரணமாக அவர்களின் சரும வகையில் மாறுதல்கள் ஏற்படும்போது ஸ்ட்ரெச் மார்க்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சில குறைபாடுகள்: சிலர் குஷிங்ஸ் சிண்ட்ரோம் அல்லது மார்ஃபான் சிண்ட்ரோம் போன்ற குறைபாடுகள் இருக்கும்போது இவை உடலில் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏன் ஏற்படுகிறது?

சருமம் தனது இயல்புத் தன்மையிலிருந்து மிக விரைவாக நீளும்போது (ஸ்ட்ரெச்) ஆகும்போது  சருமத்தில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் சிதைந்து ஸ்ட்ரெச் மார்க்ஸ் உருவாக வழி வகுக்கிறது. இது அடிப்படை திசுக்களை பாதிக்கிறது. அவை பெரும்பாலும் நீளமான, குறுகிய கோடுகள் அல்லது சிவப்பு, ஊதா அல்லது வெள்ளி நிறத்தில் இருக்கும். அவற்றின் வயதைப் பொறுத்து கோடுகளாக வெளிப்படும். காலப்போக்கில், அவை மங்கிவிடும், ஆனால், முற்றிலும் மறைந்து விடாது.

கார்டிகோஸ்டிராய்டு பயன்பாடு:

மருந்தின் பக்க விளைவுகள்: கார்டிகோஸ்டீராய்டு கிரீம்கள், லோஷன்கள் அல்லது மாத்திரைகளின் நீண்ட காலப் பயன்பாடு, கொலாஜன் அளவைக் குறைப்பதன் மூலம் சருமத்தின் நீட்டிக்கும் திறனைக் குறைக்கும்.

ஹார்மோன் மாற்றங்கள்: பருவமடைதல், கர்ப்பம் மற்றும் சில மருத்துவ நிலைகளின்போது கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் சருமத்தின் மீள் இழைகளை பலவீனப்படுத்தி இத்தகைய குறியீடுகளை உடலில் ஏற்படுத்துகின்றன. ஹார்மோன் மாற்று சிகிச்சை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஹார்மோன் மாற்றங்கள் சருமத்தின் நார்களை பலவீனப்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
தம்பதியருக்குள் ஆரஞ்சு தோல் கோட்பாடு ஏற்படுத்தும் விளைவுகள் தெரியுமா?
ஸ்ட்ரெச் மார்க்ஸ்

இவற்றை முற்றிலும் குணப்படுத்த முடியுமா?

இவை காலப்போக்கில் பொதுவாக மறைந்து விடும். ஆனால், முற்றிலுமாக மறையாது. சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் இருந்து இலகுவான வெள்ளி நிறத்துக்கு மாறும். சில மேல் பூச்சு கிரீம்கள் இவற்றின் தோற்றத்தை மேம்படுத்த உதவும். லேசர் தெரப்பி கொலாஜன் உற்பத்தியை தூண்டவும் சருமத்தின் அமைப்பு மேம்படுத்தவும் உதவும்.

இவற்றைத் தடுக்க முடியுமா?

முடியும். அதற்கு சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும். சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடித்து, பழங்கள் சாப்பிட்டு உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். விரைவாக உடல் எடை கூடுதல் அல்லது குறைப்பதை தவிர்க்க வேண்டும்.

சமச்சீர் உணவு: வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவு, குறிப்பாக வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, துத்தநாகம் மற்றும் புரதம், சரும ஆரோக்கியம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை ஆதரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com