ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு WHO சொல்லும் வழிமுறைகள்!

ஏப்ரல் 7 - உலக சுகாதார தினம்!
World Health Day
World Health Day
Published on

1948-ல் உலக சுகாதார அமைப்பு (WHO) நிறுவப்பட்டதின் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 நாள் உலக சுகாதார தினமாக (World Health Day) கொண்டாடப்படுகிறது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் வேறு வேறு நிலைகளில் கருப்பொருள் தோ்வு செய்யப்படுவது வழக்கமாகும்.

ஆனால் இந்த நாளானது 1950-ல் இருந்தே செயல்பட்டுவருகிறது.

இந்த ஆண்டின் கருப்பொருளானது 'ஆரோக்கியத்திற்காக ஒன்றிணைவோம் மற்றும் ஆரோக்கிய அறிவியலுடன் துணைநிற்போம்' என்பதாகும்.

ஆரோக்கியமான தொடக்கம் நம்பிக்கையிலான எதிா்காலம் எனவும் கருதலாம்.

தாய்மாா்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் உயிா் வாழ்தலையும் இந்த கருப்பொருள் உணர்த்துகிறது.

மக்களின் மனது மற்றும் உடல் ஆரோக்கியம் குறைவான விஷயங்களையும் முன்னெடுத்து பொதுமக்களின் சுகாதார நடவடிக்கைகளில் அவர்களின் கவனத்தை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வுகளை அவர்களுக்கு ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளை சிறப்பாக கையாளுதல், அதேநேரம் உலக அளவில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் சுகாதார சேவைகளில் நிலவி வரும் பெரும் ஏற்றத்தாழ்வுகளை சீா்படுத்த இந்த அமைப்பானது பல நிலைகளில் வலியுறுத்துகிறது.

இதனில் வருவாய் இனங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் குடும்பங்கள் மற்றும் பெண்கள் எதிா் கொள்ள வேண்டிய நிதிச்சுமைகளை சரிசெய்வது அவர்களுக்கான செயல் திட்டங்கள் மற்றும் வசதி வாய்ப்புகளை உருவாக்கும் தளங்களை கண்கானிப்பதும் இதில் அடங்கும்.

அதே நேரம் சுத்தம் சோறு போடும் என்பது போல அந்த வகையிலான சுகாதாரத்தை பேணிக்காக்க வல்ல பணியாளர்களின் நலனையும் அதிகப்படுத்த வேண்டியதை கவனிப்பதும் சுகாதார அமைப்பின் பணியாகும்.

இதையும் படியுங்கள்:
உடற்பயிற்சி பற்றி நாம் இத்தனை காலம் நம்பியது பொய்யா? அதிரவைக்கும் உண்மைகள்!
World Health Day

மனநலம் குன்றிய நபர்களை கவனிப்பதும், அவர்களது ஆரோக்கியத்தையும் பேணிக்காக்க சமூகத்தில் அவர்களை தனிமைப்படுத்தாமல் அவர்களுக்கான தேவைகளை பூா்த்தி செய்து தருவதும் சிறந்த பணியாகும்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுதமுடியும் என்பது போல சுத்தம், சுகாதாரம் இருந்தால்தான் ஆரோக்கியம் கலந்த வாழ்க்கை அமையும் என்பதே நிதர்சனமாகும்.

தன்சுத்தம்தான் சிறந்த சுகாதாரம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும் என்ற வகையில் நோய்நொடியானது வராமல் பாதுகாப்பாக இருப்பதே நமக்கு பலவகையில் உதவியாக இருக்கும்.

வருமுன் காப்பதே நலம் என்ற சொல்லிற்கேற்ப நாம் சுகாதாரத்தின் தன்மையை உணர்ந்து செயல்படுவதே நமக்கும் நாட்டிற்கும் நாம் செய்யக்கூடிய நல்ல விஷயமாகும்.

உள்ளாட்சி நிா்வாகம் சுகாதார விஷயங்களில் தீவிர கவனம் செலுத்துவது சிறப்பானதாகும்.

அதற்கு உாிய ஒத்துழைப்பும் பங்களிப்பையும் வழங்குவது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும்.

சுகாதாரம் மட்டுமல்ல எந்த திட்டமாக இருந்தாலும் பொதுமக்களின் பங்களிப்பு என்பது முழுமையாக இல்லாமல் எதையும் சிறப்பாக செயல்படுத்த இயலாது என்பதே உண்மை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com