ஏ.ஆர். ரஹ்மானுக்கு நீர்ச்சத்து குறைபாடு… யாருக்கு ஆபத்து?

A.R Rahman
A.R Rahman
Published on

சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி பலரையும் கவலை கொள்ளச் செய்தது. பின்னர், அவருக்கு ஏற்பட்டது நீர்ச்சத்து குறைபாடுதான் என்றும், வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின் அவர் வீடு திரும்பினார் என்றும் வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்தது. 

உடலில் நீர்ச்சத்து குறையும்போது பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் மட்டுமின்றி, நெஞ்சு வலியும் கூட இதன் காரணமாக வர வாய்ப்புள்ளது. நீர்ச்சத்து குறையும்போது இரத்தத்தின் அளவு குறைந்து, இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்கும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து இதயத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். மேலும், இரத்தம் அடர்த்தியாவதால் உறைதல் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுவும் நெஞ்சு வலிக்கு வழிவகுக்கலாம்.

உடலில் சோடியம், பொட்டாசியம் போன்ற உப்புகளின் அளவு குறையும்போதும் இதேபோன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். இந்த சத்துக்கள் இதயத்தின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம். இவை குறையும்போது இதயத்துடிப்பு சீரற்று மாற வாய்ப்புள்ளது. குறிப்பாக ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் நீண்ட நேரம் உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் இருப்பதால் நீர்ச்சத்து மற்றும் உப்புச்சத்து குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது நெஞ்சு வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

நீண்டகால மன அழுத்தமும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். மன அழுத்தம் காரணமாக உடலில் சுரக்கும் சில வேதிப்பொருட்கள் இரத்த நாளங்களை சுருங்கச் செய்யலாம் அல்லது வீக்கத்தை ஏற்படுத்தலாம். இதுவும் நெஞ்சு வலி அல்லது அசௌகரியத்தை உண்டாக்கக்கூடும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான ரமலான் ‘நோன்பு கஞ்சி’ எப்படி செய்வது?
A.R Rahman

ஏ.ஆர். ரஹ்மானுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தீவிரமான பிரச்சனைகள் ஏதும் இல்லை என்பது தெரிய வந்தது. இந்த நிகழ்வு ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் அருந்துவது மிகவும் முக்கியம். குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது தவறாமல் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நாக்கு வறண்டு போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
தீப்பெட்டியில் தண்ணீர் பட்டுவிட்டால்...?
A.R Rahman

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com