தினமும் ஒரு கைப்பிடி வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

Boiled peanuts
Boiled peanuts
Published on

வேர்க்கடலையை உடைத்து சாப்பிடுவது எத்தனை பேருக்கு பிடிக்கும்? வேர்க்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன. பாதாம், பிஸ்தா போன்ற விலை அதிகமான பருப்புகளுக்கு பதில் மிகவும் விலை மலிவான வேர்க்கடலையை உணவில் எடுத்துக்கொள்வது  சிறந்ததாகும். அதிலும் வேகவைத்து  சாப்பிடும் வேர்க்கடலையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நன்மைகள் அதிகம் உள்ளன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. வேகவைத்த வேர்க்கடலையில் வைட்டமின், மினரல், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இது உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது. சைவ பிரியர்கள் தங்கள் உணவில் புரதம் எடுத்துக்கொள்ள  வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.

2. வேர்க்கடலையில் இருக்கின்ற Mono unsaturated fats மற்றும் Poly unsaturated fats இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியதாகும். இந்த நல்ல கொழுப்பை எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

3. வேர்க்கடலையில் அதிகமாக Resveratrol என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது உடலில் உள்ள ப்ரீரேடிக்கல்களைக் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

4. வேர்க்கடலையில் அதிகமாக புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளதால், பசியை குறைத்து உணவு சாப்பிட்ட முழு திருப்தியை கொடுக்கிறது. அதனால் உடல் எடைக் குறைக்க நினைப்பவர்கள் வேர்க்கடலையை தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலனைப் பெறலாம்.

5. வேர்க்கடலையில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால், உடலில் சர்க்கரை அளவு உறிஞ்சப்படுவதை குறைத்து சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. இதனால், நீரிழிவு நோய் போன்ற பிரச்னைகள் வருவதைத் தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!
Boiled peanuts

6. வேர்க்கடலையில் Folate மற்றும் Niacin உள்ளது. இவை மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது அறிவாற்றலை மேம்படுத்தவும், ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கும் உதவுகிறது.

7. வேர்க்கடலை உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிறு சார்ந்த பிரச்னைகள் வராமல் பாதுகாக்கிறது. எனவே, தினமும் ஒரு கைப்பிடி வேக வைத்த வேர்க்கடலையை உணவில் சேர்த்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com