சிலர் காலையில் தினமும் இட்லி சாப்பிடுவது வழக்கம். அது ஏன் தெரியுமா? அதற்குமுன் நாம் அதன் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.
சுடசுட இட்லியுடன் நிரம்ப சாம்பார் ஊற்றி சாப்பிடும்போது அவ்வளவு சுவையாக இருக்கும். அதேபோல் இடலியுடன் காரமான மிளகாய் சட்னி மற்றும் தேங்காய்ச் சட்னி வைத்து சாப்பிட்டால், எத்தனை இட்லி உள்ளே போகும் என்பதே தெரியாது. இப்படி இடலிக்கு விதவிதமான சாம்பார், குருமா, சட்னி வைத்து பிரியத்துடன் சாப்பிடுபவர்கள் ஏராளம். அந்தவகையில் காலையில் இட்லி சாப்பிடுவதால், ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.
இட்லியில் எண்ணெயை பயன்படுத்தமாட்டோம். ஆவியில் மட்டுமே வேகவைப்போம். இதுவே ஏராளமான நன்மைகளைத் தருகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் காலையில் இட்லி எடுத்துக்கொண்டால் பலன் கிட்டும். வளர்ச்சிதை மாற்றத்துக்கு எளிதானது. இவற்றில் உள்ள மேம்படுத்தப்பட்ட தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உடலில் உடைந்து செரிமான செயல்முறையை மேம்படுத்தும்.
இவற்றில் கலோரிகள் குறைவு. அரிசியில் உள்ள கலோரிகளைக்கூட புரதம் நிறைந்த பருப்பு வகைகள் மற்றும் சாம்பாருடன் சேர்க்கப்படும் காய்கறிகளால் குறையும்.
இட்லி சாப்பிட்டால், நீண்ட நேரம் பசிக்காமல் இருப்பதை கவனிக்க முடியும். ஏனெனில், இவற்றில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகியவை இருக்கும். ஆகையால், இது ஆரோக்கியமிக்க உணவாகும்.
இட்லி மாவை நாம் புளிக்கவைத்தே இட்லி செய்வோம் என்பதால், இது குடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
உளுத்தம் பருப்பு பயன்படுத்தி இட்லி செய்வதால், இதனை காலை வேளையில் உணவாக எடுத்து வந்தால், நாள் முழுவதும் உடல் வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் இருக்கும்.
உடலினுள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள செல்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்னும் அமினோ அமிலம் இட்லியில் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.
சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் 10 மடங்கு அதிகமாக இட்லியில் உள்ளது.
இட்லியை 8 மாத குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம். ஏனெனில், பஞ்சு போன்ற இதன் மென்மை, விழுங்குவதற்கு எளிதாக இருக்கும். ஆகையால், தினமும் இட்லி சாப்பிடுவதால் சலித்துக்கொள்வதைத் தவிருங்களேன்….