ஆத்தாடி... காதுல இவ்வளவு சமாச்சாரங்கள் இருக்கா?

Are there so many things in the ears?
Are there so many things in the ears?

‘காதுகள் நமக்கு எதற்கு இருக்கு?’ என்று யாரையாவது கேட்டுப்பாருங்க. ‘பேசுவதைக் கேட்பதற்கு’ என்பார்கள்! ஆனால், காது இன்னொரு முக்கியமான விஷயத்தையும் செய்கிறது. அது, உங்கள் கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்குக் காரணம் காதுகள்தான்! நாம் மயங்கி தரையில் சரிந்து விடாமல், மொத்த உடல் அமைப்பையும் சமநிலைப்படுத்த காதுகள் ஒருவருக்கு மிகவும் அவசியமானவை.

ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை. மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்? பைக் நிற்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது. அதனால் தன்னைத்தானே சமநிலைபடுத்திக்கொள்ள முடிவதில்லை. ஆனால், மனிதனால் அது முடியும். அவன் வடிவம் நிற்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை தரையில் சமநிலையுடன் நிற்க வைக்கிறது என்றால், அவன் காதில் உள்ள ‘காக்லியா’ திரவத்தினால்தான். ஒரு இறந்த உடலை நிற்க வைக்க முடியுமா? முடியாது. ஏனெனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதேவேளை உயிருடன் இருப்பவனால் நிற்க முடிகிறது.

காது கேட்பதற்கும் காக்லியா திரவம் உதவுகிறது. ஒலி அலைகளை நமது காது மடல்கள் உள்வாங்கி, காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் உங்கள் மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது. 10 அல்லது 15 டெசிபல் சத்தங்கள் வரை காது கேட்கப் போதுமானவை. அது மீறும்போது காதுகளில் பிரச்னைகள் வரும். முதலில் மயக்கம், தலை சுற்றல், வாந்தி, மண்டை வலி எனத் தொடர்ந்து, இறுதியில் காது கேட்கும் திறனை அது குறைந்து விடும்.

இதையும் படியுங்கள்:
சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
Are there so many things in the ears?

காதின் மடல்கள் மிகவும் அற்புதமான வடிவத்தில் ஆனவை. மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் புனல் வைக்காமல் எண்ணெய் ஊற்றினால் சிதறிப்போகும். அதேபோன்றுதான் நமக்குக் காது மடல்கள் இல்லாவிட்டால் சத்தங்கள் நேரடியாக மண்டைக்குள் மோதி, அதுவே நம்மைக் கொன்று விடும்! அவ்வளவு வலிமையுடையதாக இருக்கும் அந்த சத்தங்கள். அதைத்தான் ஃபில்டர் செய்கிறது நமது காது மடல்களும் அதைச் சுற்றி உள்ள சிக்கலான அமைப்புகளும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com