நீங்க பாஸ்டா சப்பிடுவீங்காளா? அச்சச்சோ போச்சு!

eating food
eating food
Published on

சிலர் வேகமாக சாப்பிடுவார்கள், சிலர் மெதுவாக சாப்பிடுவார்கள். ஆனால் எப்படி சாப்பிட்டாலும் அதை எவ்வாறு சாப்பிடுகிறோம் என்றுள்ளதல்லவா? உணவுகளை சாப்பிடும் போது மென்று சாப்பிட வேண்டும் என்று நம்மில் பலர் அறிந்தும் அதை செய்வதில்லை என்பதே உண்மை. அதிலும் தற்போது இருக்கும் பணி சுமைகளுக்கு மத்தியில் சாப்பிடும் போது உணவுகளை மென்று சாப்பிட வேண்டும் என்பதை நம்மில் பலர் மறந்து விட்டோம் என்று தான் கூற வேண்டும். ஆனால் அவ்வாறு உணவினை மென்று சாப்பிடவில்லை எனில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சாப்பிடும் போது ஒன்றும் தெரியாது. ஆனால் பின் விளைவுகளால் சிரமப்பட நேரிடும்.

ஏற்படும் பாதிப்புகள்:

உணவினை நன்றாக மென்று விழுங்காமல் நேரடியாக உட்கொள்ளும் போது செரிமான அமைப்பு அதிக அளவில் பாதிக்கப்படும். நமது உணவுகளை செரிமானம் செய்வதற்கு தேவையான என்சைம் சுரக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இதனால் வயிற்றுப் பகுதிகளில் வீக்கம், பேதி, வாந்தி, தசை பிடிப்புகள், தலைவலி, சரும பிரச்சனைகள், வாயு தொல்லைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எத்தனை முறை மென்று சாப்பிட வேண்டும்?

ஒரு உணவின் சுவையை அறிந்து கொள்வதற்கு அந்த உணவை நன்றாக மென்று சாப்பிடுவது அவசியம். நீங்கள் ஒவ்வொரு முறை அந்த உணவை மென்று சாப்பிடும் போதுதான் அந்த உணவின் உண்மையான ருசியினை அறிய முடியும்.

இதையும் படியுங்கள்:
தினசரி 3 கிராம்பு சாப்பிடுவதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்! 
eating food

நாம் உண்ணும் உணவுப் பொருட்களின் அடிப்படையில் எத்தனை முறை மென்று சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

பழங்கள் சாப்பிடும் போது குறைந்தது ஏழு முறையாவது மென்று சாப்பிட வேண்டும். மற்ற உணவுகளாக இருந்தால் குறைந்தது 20 முதல் 30 முறை வரை மென்று சாப்பிடுவது அவசியம். நீங்கள் எப்போதாவது இப்படி மென்று சாப்பிட்டதுண்டா?

நாம் உண்ணும் உணவானது முதலில் வாய்ப்பகுதியிலேயே உடைக்கப்பட்டு கூழ்ம நிலைக்கு வந்த பிறகு அதனை விழுங்க வேண்டும். விழுங்கும் உணவு தசைப்பகுதிகளுக்கு சென்று ரசாயனங்களின் மூலம் செரிமானம் செய்யப்படும். பற்களுக்கு வேலை கொடுப்பதனால் பல் ஆரோக்கியமும் மேம்படும். செரிமான அமைப்பிற்கு குறைவான வேலை கொடுப்பதனால் ஆரோக்கியமான உடல் இயக்கங்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

எனவே உணவினை எடுத்துக் கொள்ளும் போது அவசரமாக விழுங்காமல், மெதுவாக மென்று சாப்பிடுங்கள் இது உங்கள் நோயற்ற வாழ்க்கை முறைக்கு உதவியாக இருக்கும். வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவினை கூழ்மைநிலையில் கொடுப்பது அவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். குழந்தைகள் தானாக சாப்பிடும் பருவத்தில் உணவினை எப்படி மென்று விழுங்க வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்.

‘ஆரோக்கியமான உடலிற்கு உணவினை மென்று சாப்பிடுவது மிக அவசியம்’

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com