நீங்கள் அதிகம் டீ குடிப்பவரா? அப்படியென்றால் இது உங்களுக்குத்தான்!

Are you a heavy tea drinker? Then this is for you
Are you a heavy tea drinker? Then this is for youhttps://ta.quora.com

காலையில் எழுந்ததும் ஸ்ட்ராங்கா பில்டர் காபி , டீ போன்ற பானங்களை அருந்தினால்தான் நமக்கு வேலையே ஓடும். பொதுவாக, காலையில் எழுந்ததும் கார்டிசோல் எனப்படும் மன அழுத்த ஹார்மோனின் வீரியம் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் காபி, டீ உட்கொள்ளும்போது அதில் இருக்கும் காபின், ஹார்மோன் செயல்பாடுகளை தூண்டிவிடும். எனவே, காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி மற்றும் பிற வகையான காபின் பனங்களை பருகுவதை தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் டீ அல்லது காப்பி உட்கொள்ளும்போது அது அசிடிட்டி, செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஆதலால், காலையில் எழுந்ததும் ஏதாவது உணவு சிறிதளவு உட்கொண்டதும், டீ, காபி பருகுவது நன்மை பயக்கக்கூடிய விஷயம். மற்ற டீ வகைகளை எப்பொழுது, எப்படி பருகலாம் என்பதைப் பார்ப்போம்!

கிரீன் டீ பருகுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். ஆனால், அதனை சரியான நேரத்தில் பருகுவது முக்கியமாகும். இல்லாவிட்டால் நன்மை செய்வதற்கு பதிலாக தீங்கு விளைவித்து விடும். அதேபோல், கிரீன் டீயை அதிகமாக  அருந்தாமல் அரை கப் பருகுவது நல்லது. உணவுக்கு இரண்டு மணி நேரத்துக்கு பிறகு கிரீன் டீ பருகுவது சரியானது. காலை வெறும் வயிற்றில் இதை குடிக்காமல் இருந்தால் இதில் உள்ள டானின்கள் வயிற்றில் எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தாது. வாயு தொல்லை, அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்னைகளுக்கு வழி வகுக்காது. எனவே வெறும் வயிற்றில் கிரீன் டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

கிரீன் டீ குறைவாக பருகும்போது உடல் நலக் கோளாறுகள் வராது. இதயத்துடிப்பு  சீராக இயங்குவது மற்றும் சரியான தூக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். உடல் எடையை குறைப்பதற்காக கிரீன் டீ உட்கொள்வதாக இருந்தால் குறைவான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் இரண்டு அல்லது மூன்று கப் கிரீன் டீ பருகுவது நல்லது. அதற்கு மேல் பருகக் கூடாது. தூங்குவதற்கு முன்பு மூன்று மணி நேரத்திற்கு முன்பு கிரீன் டீ அருந்துவது ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும். அதேபோல்,  இரவு உணவு உட்கொண்டதும் கிரீன் டீ பருகுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வெல்லம், சர்க்கரையை எதனுடன் சேர்த்தால் சுவைகூடும் தெரியுமா?
Are you a heavy tea drinker? Then this is for you

பிளாக் டீ, கிரீன் டீ போன்றவற்றில் பாலிபினால்கள் உள்ளன. இவை இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  மேலும், சிறுநீரகத்தில் கல் படிவதை தடுப்பது, கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது, எலும்புகளை வலிமைப்படுத்துவது, நீரிழிவு நோய் வராமல் தடுப்பது, உடல் எடையை குறைப்பது, செரிமானம் சீராக நடைபெற ஊக்குவிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பது உட்பட ஏராளமான நன்மைகளை பிளாக் டீ பருவதன் மூலம் பெறலாம்.

எந்த வகை டீயாக இருந்தாலும் சரியான நேரம் பார்த்து, அளவுடன் அருந்தினால் ஆரோக்கியம் மேம்படும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com