பேக்கரி உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவரா நீங்கள்? ஜாக்கிரதை!

Bakkery Snacks
Bakkery Snacks

பேக்கரி உணவுகள் அவற்றின் நறுமணம் மற்றும் சுவை காரணமாக பலர் தினசரி வாங்கி சாப்பிடும் ஒன்றாக மாறிவிட்டது. விதவிதமான கேக்குகள் முதல், ஜேம் தடவப்பட்ட ரொட்டிகள்வரை பலருக்கு பலவிதமான சுவையைத் தருகின்றன. இருப்பினும் இத்தகைய சுவையான உணவுக்கு பின்னால் இருக்கும் ஆபத்துக்களை பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் பேக்கரி உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பார்க்கலாம். 

அதிகப்படியான சர்க்கரை: பொதுவாகவே பேக்கரி உணவுகளில் அதிகமான சர்க்கரைகள் கலக்கப்படுகின்றன. இது எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் பிற உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மேலும் பேக்கரி உணவுகள் பெரும்பாலும் மைதா மாவில் தயாரிக்கப்பட்டு, செயற்கை மூலப்பொருட்கள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்படுகின்றன. இதனால் செரிமானப் பிரச்சனை, உடலில் வீக்கம் மற்றும் இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம். 

டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால்: பொதுவாகவே தாவர எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பேக்கரி உணவுகளில் அதிகப்படியான ட்ரான்ஸ் கொழுப்புகள் உள்ளன. இவை கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்தி நல்ல கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன. இது இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. பேக்கரி உணவுகளை வழக்கமாக உட்கொள்வது உங்கள் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி தீவிர இருதயப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

ஒவ்வாமை: பேக்கரி உணவுகள் பெரும்பாலும் கோதுமை முட்டை பால் மற்றும் நட்ஸ் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்படலாம். எனவே ஏற்கனவே ஒவ்வாமை மற்றும் சென்சிடிவ் பிரச்சனை இருப்பவர்கள் இதுபோன்ற பேக்கரி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 

அதிக கலோரி: பேக்கரி உணவுகளில் உள்ள கலோரி பொதுவாகவே குறைவாக மதிப்பிடப்படுகின்றன. இதை பெரும்பாலானவர்கள் முழு உணவாக உட்கொள்ளவில்லை என்றாலும், ஒரு முழு உணவு உட்கொள்ளும் அளவிலான கலோரி சிறு துண்டு கேக் சாப்பிடுவதில் நிறைந்துள்ளது. எனவே இவற்றை அடிக்கடி உட்கொள்வது உங்களது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவுக்குகலாம். 

இதையும் படியுங்கள்:
லிப்ஸ்டிக் குறியீட்டு கோட்பாட்டின் சாதக, பாதகங்களை அறிவோம்!
Bakkery Snacks

பேக்கரி உணவுகள் சுவையாக இருந்தாலும் பெரும்பாலும் அவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதில்லை. இவற்றில் நார்ச்சத்து, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைவாகவே உள்ளன. இது குறைந்த ஊட்டச்சத்து மதிப்புள்ள தேவையில்லாத கலோரிகளை அதிகமாக உடலுக்கு வழங்குகிறது. எனவே உங்களது ஆரோக்கியமான உணவில் ஒரு பகுதியாக பேக்கரி உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை இவற்றை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com