அதிகமாக கரும்பு ஜூஸ் குடிப்பவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இதைப் படியுங்கள்!

Karumbu
Karumbu

Indian Council of Medical Research-ன் புதிய ஆய்வில், கடைகளில் வாங்கும் பானங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடைக்காலங்களில் தெருவுக்கு தெரு ஜூஸ் கடைகளைப் பாரக்கமுடியும். ரோஸ்மில்க் போன்ற பானங்களிலிருந்து பழச்சாறு வரை கடைகளில் ஏராளமாகப் பார்க்க முடியும். இதுகுறித்து Indian Council of Medical Research ஒரு ஆய்வு மேற்கொண்டது. இதனையடுத்துதான் இந்த ஜூஸ் விஷயத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.

வெளியில் செல்லும்போது தாகம் எடுக்கும்போது அனைவரும் ஜூஸ் குடிப்பதையே விரும்புவார்கள். ஆனால், அந்த சமயங்களில் ஜூஸை தவிர்க்க வேண்டுமெனவும், நீர் அருந்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுகிறது. குறிப்பாக கரும்புச் சாற்றில் உள்ள இயற்கையான சர்க்கரை பல நோய்களை உண்டாக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கரும்புச்சாறு மூலம் சர்க்கரையை உட்கொள்வதால், அந்த சர்க்கரையை குளுக்கோஸாக மாற்ற நிறைய தண்ணீர் தேவைப்படும். மேலும் குளுக்கோஸின் அளவும் பெருமளவில் அதிகரிக்கும். இந்தக் காரணத்தினால், சர்க்கரை நோய், இன்ஸுலின் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கரும்புச் சாற்றில் கலோரிகளும் அதிகம்.

இதனால் உடல் எடை அதிகரிப்பது மட்டுமின்றி சர்க்கரை நோய், இதய பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. தண்ணீருக்குப் பதிலாக கூல் ட்ரிங்க்ஸ் குடித்தால், அதில் கார்போஹைட்ரேட் அதிகம் என்றும், இதனால் கலோரிகள் அதிகரித்து எடை கூடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் பானத்திற்கு நிறம் கொடுக்க வண்ணங்கள் சேர்ப்பதும், நீண்டக் காலம் கெடாமல் இருக்க ரசாயனங்கள் சேர்ப்பதும் பல கோளாறுகளைக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆண்களே இது உங்களுக்காக... கொஞ்சம் கவனியுங்கள்!
Karumbu

அதேபோல் டீ காபி குறித்தும் அவர்கள் கூறியுள்ளனர். அதாவது இரண்டையுமே காலை மற்றும் மாலை குடித்தால் போதும். காபி மற்றும் டீக்கு பதிலாக மூலிகை டீ, கிரீன் டீ, கெமோமில் டீ, இலவங்கப்பட்டை டீ போன்ற மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட டீயை குடிக்க வேண்டும்.

அதேபோல் காலையில் இரண்டு முதல் மூன்று கண்ணாடி டம்பளரில், மதிய உணவுக்கு முன் 1 கண்ணாடி டம்ளர், சாப்பிட்ட நான்கு மணி நேரம் கழித்து 2 கண்ணாடி டம்பளர், மாலை 2 கண்ணாடி டம்பளர் மற்றும் இரவில் மீண்டும் இரண்டு கண்ணாடி டம்பளர் என்ற விகிதத்தில் நீர் அருந்தவும். தர்பூசணி, பீட்ரூட் போன்ற பழங்களை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு ஈரப்பதம் அளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com