நீங்க Tea பிரியரா? அய்யய்யோ ஜாக்கிரதை!

Are you a tea lover? Beware
Are you a tea lover? Beware
Published on

நாம் தினமும் ரசித்து, ருசித்துக் அருந்தக்கூடிய டீயில் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

டீ பிரியர்களையும், டீயையும் பிரிக்க முடியாது. தினமும் கட்டாயம் டீ குடித்தால்தான் அவர்களின் அன்றாட நாளே நகரும். அத்தகைய புத்துணர்ச்சி தரக்கூடிய டீயில் எண்ணற்ற பிளாஸ்டிக் துகள்கள் மிதந்துக் கொண்டிருக்கின்றன. அது தெரியாமலேயே நாம் தினமும் டீயை அருந்திக் கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு அதிர்ச்சிகரமான விஷயம்.

தற்போது விற்பனையாகும் டீ தூள்கள் டீ பேக்குகளில் வருகின்றன. இதை சாதாரணமாக கொதிக்கும் பாலிலோ அல்லது நீரிலோ போட்டு 2 நிமிடம் கழித்த பிறகு சுவையான டீயை அருந்தலாம். அந்த டீ பேக்கில் இருக்கும் தூளில் இருக்கும் சாறு பாலிலோ அல்லது வெந்நீரிலோ இறங்கிருக்கும். இருப்பினும், அந்த டீ பேக்கை எதில் செய்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்ததுண்டா? டீ பேக்குகளில் 20 முதல் 30 சதவீதம் பிளாஸ்டிக் உள்ளது. ஒரேயொரு டீ பேக்கில் 11.6 பில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் 3.1 பில்லியன் நானோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன.

‘அது என்ன மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக்?’ என்று கேட்கிறீர்களா? மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் என்பது நம் கண்களுக்குத் தெரியாத அளவில் சிறிய துகள்களாக இருக்கும் பிளாஸ்டிக் ஆகும். டீயில் மிதக்கும் இந்த மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியது.

இது நம் செல்களை அதிகமாக பாதிக்கிறது. இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்பொழுது, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை, நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதனால் புற்றுநோய் வருவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளன. மனிதர்கள் உருவாக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் இது சூற்றுச்சூழலையும் பாதிக்கிறது. நுண்ணுயிர்கள், கடல்வாழ் உயிரினங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
வாய் துர்நாற்றம் போக்க என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?
Are you a tea lover? Beware

இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? டீ பேக்குகளை வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, சாதாரணமாக விற்கும் டீ தூள்களை வாங்கிப் பயன்படுத்தலாம். இருப்பினும், நாம் அதை வடிகட்டப் பயன்படுத்தப்படும் வடிகட்டிகளிலும் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளதை மறக்க வேண்டாம். எனவே, ஸ்டேயின்லெஸ் ஸ்டீல் வடிகட்டிகளை உபயோகிக்கவும். தற்போது உள்ள காலக்கட்டத்தில் இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களிலும் நம் ஆரோக்கியத்திற்கு எது சிறந்ததாக இருக்கும் என்பதைப் பார்த்து பொருட்களை வாங்கி பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com