நீங்கள் தீவிர செல்போன் உபயோகிப்பாளரா? ‘Phantom ringing syndrome’ என்றால் என்னவென்று தெரியுமா?

What is Phantom ringing syndrome?
What is Phantom ringing syndrome? Image Credits: ChannelLife UK
Published on

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்தக் காலக்கட்டத்தில், கையில் போன் இல்லாமல் 10 நிமிடம் கூட இருக்க முடிவதில்லை. எந்நேரமும் போனும் கையுமாகவே மக்கள் இருக்கிறார்கள். தூங்கும்போது கூட போனை தலையணைக்கு கீழ் வைத்துக் கொள்பவரை பார்த்திருப்போம்.

அடிக்கடி நமக்குப் பிடித்தவர்களுக்கு போன் செய்வதும், குறுஞ்செய்தி அனுப்புவதும் என்று இருப்பவர்களை சோதித்து பார்க்கையில் அவர்களில் நிறைய பேருக்கு போன் தொடர்பான Hallucination வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நம்மில் பலர் போனை Vibration modeல் வைத்திருப்போம். அப்படி வைத்திருக்கும்போது, போன் வரவில்லை என்றாலுமே சிலருக்கு போன் வைப்பரேட் ஆவது போல உணர்வு தோன்றும். போனை எடுத்துப் பார்த்தால் எந்தக் காலும் வந்திருக்காது. இதற்குப் பேர்தான் 'Phantom vibration syndrome.'

இதேபோல இன்னொரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால், போன் அடிக்காது. ஆனால், போன் அடிப்பது போலத் தோன்றும். அதுவும் தெளிவாக உங்களுடைய Ringtone சத்தமே கேட்கும். ஆனால், கால் வந்திருக்காது. இதற்கு பெயர் தான் 'Ringxiety' ஆகும். அதாவது Ring+anxiety என்பதாகும்.

இது நம்மில் பலருக்கும் வரும். இது ஏதாவது நோயாக இருக்குமோ? என்று நினைத்து பயப்பட வேண்டாம். இது Disorder கிடையாது. ஆனால், இல்லாத ஒன்றை இருப்பது போன்று நாம் உணர்வதால், இதை Hallucination என்று சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
‘டெக் நெக் சிண்ட்ரோம்’ என்றால் என்ன தெரியுமா?
What is Phantom ringing syndrome?

இந்தப் பிரச்னை யாருக்கு வருமென்றால், யார் அதிகமாக போன் உபயோகப்படுத்துகிறார்களோ? யார் போனை நம்பியே வாழ்க்கை நடத்துகிறார்களோ? யாரால் போனை ஒரு நிமிடம் கூட கீழே வைக்க முடியவில்லையோ? அதுபோன்ற நபர்களுக்குத்தான் இந்த பிரச்னை அதிகமாக ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

இப்படி உங்களுக்கு ஏற்படுகிறது என்றால், கண்டிப்பாக போன் அதிகமாகப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். Digital diet இருப்பது நல்லதாகும். அதாவது போன், லேப்டாப், டேப் போன்ற பொருட்களை சிறிது காலம் பயன்படுத்தாமல் ஓய்வு எடுத்துக் கொள்வதாகும். இப்படி Virtual environment ல் இருந்து ஒதுங்கி இருப்பதனால் இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். உங்கள் மனமும் ரிலாக்சாக இருப்பதை உணரலாம். முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com