காலையில் அலாரத்தை அணைத்து விட்டு மீண்டும் தூங்குபவரா நீங்க? அவ்வளவுதான் போங்க!

Turning off the alarm
Turning off the alarm
Published on

காலையில் எழுந்தவுடன் நம் மனநிலை மகிழ்ச்சியாக இருந்தால் தான் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். யோகா, தியானம் ஆகியவற்றை தினசரி காலையில் கடைபிடியுங்கள். இது உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும், மனமும் லேசாக இருக்கும். முந்தைய நாள் கோவங்களை அன்றே விட்டு விடுங்கள்! இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் துவங்க உங்கள் கவலைகளை, கோவங்களை காலையில் நினைவுக்கு கொண்டு வராதீர்கள்!

நமது ஆரோக்கியத்தை வாழ்க்கை முறையின் மூலம் சரியாகவோ, தவறாகவோ, நாமே அமைத்துக் கொள்கிறோம். நமது ஆரோக்கியத்தின் முழுப் பொறுப்பும் நம்முடையதுதான். எந்தளவிற்கு நாம் சுறுசுறுப்பாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு நமது மனதும் உடலும் சிறப்பாக இருக்கும். சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை மனதையும் உடலையும் சோர்வாகவே வைத்திருந்து உடல் நலக் கேட்டிற்கு வழிவகுப்பதோடு, நமது மகிழ்ச்சிக்கும் ஊறு விளைவிக்கிறது.

காலையில் எழுந்ததும் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்:

1. காலையில் எழ அலாரம் வைக்கும் பழக்கம் இருந்தால் அலாரம் அடித்த உடன்  எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். அலாரத்தை அணைத்து விட்டு மீண்டும் தூங்காதீர்கள்! இது உங்களை சோம்பேறி ஆக்கும் முதல் படி. தாமதமாக நீங்கள் எழுந்தால், அவசர அவசரமாக குளித்துவிட்டு, சரியாக உணவு சாப்பிடாமல் , வேலைக்காக அவசரமாக ஓட வேண்டும். இது உங்களை பரபரப்பு ஆக்குவதோடு உங்களுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். உங்களுக்கு காலையிலேயே சோர்வினை உருவாக்கும்.

2. எழுந்த உடன் யாருக்கும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளாதீர்கள். உங்களின் முந்தைய நாள் வேலைகளை, பாதியில் விடுபட்டதை பற்றி காலையில் எழுந்தவுடன் பேசி மனதில் அழுத்தத்தை உருவாக்க வேண்டாம். அது உங்களுக்கும் நீங்கள் தொடர்பு கொண்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். 

3. படுக்கையில் இருந்து கொண்டே காபி அல்லது தேநீர் குடிக்க வேண்டாம். முதலில் பல் துலக்கி விட்டு இரண்டு டம்ளர் தண்ணீரைக் குடியுங்கள். அதன் பிறகு சிறிது இடைவேளை விட்டு பானங்களை பருகுங்கள். வெறும் வயிற்றில் பானங்களை குடித்தால் அது ஆரோக்கியத்தைக் கெடுக்கும். முக்கியமாக அலர்ஜி, வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுத்தும்.

4. நீங்கள் கழிவறை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் உங்கள் கைகளை கழுவுங்கள். சரியாக கைகளைக் கழுவாமல், கண், மூக்கு, வாய் போன்றவற்றைத் தொடக்கூடாது. அதே கையால் எந்த உணவைச் சாப்பிட்டாலும் பல்வேறு நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வரலாம். சுவாசம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளும் இதில் அடங்கும்.

இதையும் படியுங்கள்:
அலாரம் அடிக்கவில்லையா? கோபம் வருகிறதா? முதலில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள்..!
Turning off the alarm

5. நம் பற்களை சுத்தம் செய்த பிரஷ்ஷை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பிரஷ் சரியாகக் கழுவாமல் இருந்தால், அதில் பாக்டீரியாக்கள் வளர்ந்து, வாய் துர்நாற்றத்துடன் பல், ஈறு தொடர்பான நோய்களை உண்டாக்கும். இதனால், தொற்று உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது.

6. லேசான காலை உணவுகளை சாப்பிடுங்கள். காலை உணவுகள் பெரும்பாலும் எளிதில் செரிக்கக் கூடியதாகவும் மாசலாக்கள், காரம் தவிர்க்கப்படதாகவும் இருக்க வேண்டும். காலை உணவில் வெள்ளரிக்காய், தர்பூசணி துண்டுகள், பழ சாலட்களுடன் சாப்பிடுவது நல்லது. காலை உணவில் அசைவம், சீஸ், பனீர் , கிரீம் , ஐஸ்கிரீம் போன்ற கொழுப்பு உணவு பொருட்களை தவிர்த்து விடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com