
மா இலை
மா இலையில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. மா இலைகளை நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வர வாந்தி வருவது குறையும்.
இளநரை, முடி கொட்டுவது போன்ற பிரச்னைகளுக்கு மா இலைச் சாறுடன் பொன்னாங்கண்ணி சாறு, தே எண்ணெய் ஆகியவற்றை கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வர நல்ல பலன்களை அடைய முடியும். தீப்புண்கள் மீது மா இலைகளை எரித்து, அதன் சாம்பலுடன் பசு வெண்ணெய் சேர்த்து தடவினால் வலி உடனே நிற்கும். பித்த வெடிப்பின் மீது மா இலையின் காம்பை ஒடித்து, அதிலிருந்து வரும் பசையை தடவி வர நல்ல குணம் கிடைக்கும். தொண்டைக்கட்டு, குரல் கம்மல் பிரச்னைக்கு கொழுந்து மா இலைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து மென்று சாப்பிட குணம் கிடைக்கும்.
வேப்பிலை
வேப்பிலை பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. பல்வேறு வைரஸ், பாக்டீரியா கிருமிகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேப்பந்தளிருடன் ஓமம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட நல்ல குணம் கிடைக்கும். வேப்பங்கொழுந்து, மஞ்சள், தாளகம் இந்த மூன்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து, இந்தக் கலவையை முகத்தில் பூசி கழுவிவர தேவையற்ற முடிகள்.
உதிர்வதுடன் மீண்டும் வராது. வேப்பிலை பூச்சி கொல்லி மருந்தாகவும் பயன்படுகிறது. வேப்பிலை சாறு, எ சாறு, தேன் மூன்றையும் கலந்து இரவில் குடித்து வர நல்ல தூக்கம் வரும். சரும நோய்களை குணப்படுத்தும் சக்தி வேப்பிலைக்கு உண்டு.
வெற்றிலை
வெற்றிலையில் இரும்பு சத்து, தாது உப்புக்கள் அதிகமாக உள்ளன. வெற்றிலை, இஞ்சி, தேன் ஆகியவற்றை வெறும் வாயில் மென்று தின்றால் அஜீரணக் கோளாறுகள், வயிற்று பிரச்னைகள் குணமாகும். வெற்றிலையை மிதமாக சூடுபடுத்தி சாறு எடுத்து இந்த சாறை மூக்கில் சில சொட்டுகள் விட தலைவலி, தலைபாரம், தும்மல் சரியாகும். வெற்றிலை, ஜாதிக்காய், கிராம்பு மூன்றையும் மென்று சாப்பிட இல்லற இன்பம் கூடும். குழந்தைகளின் மலக்கட்டை நீக்கும்.
துளசி
துளசி உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். குழந்தைகளுக்கு ஏற்பட்ட சளி விரைவில் குணமாக துளசி, மிளகு வேப்பிலை மூன்றையும் கஷாயமாக்கி கொடுக்க சளியினால் ஏற்பட்ட உடல்வலி விரைவில் குணமாகும். துளசி இலைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்க சளி, தலைவலி பிரச்னைகள் சரியாகும். துளசியுடன் எ சாறு சேர்த்து அரைத்து தோல் புண், பூச்சிக்கடி காயங்கள் மீது தடவிவர விரைவில் குணமாகும்.