அதிக ஊட்டச் சத்துகள் நிறைந்த, Rs.100/- க்குள் கிடைக்கும் 6 வகை உணவுகள்!

Healthy food
Healthy food
Published on

மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் வேலை செய்வதற்கு உடலில் சக்தி தேவைப்படுகிறது. உடல் சக்தி பெற ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினசரி உட்கொள்வது அவசியமாகிறது.

அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் வாங்கக் கூடிய, Rs.100/- க்குள் கிடைக்கும், ஊட்டச் சத்துக்கள் நிறைந்த 6 வகை உணவுகள் என்னென்ன என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

1. தானியம் மற்றும் பருப்பு வகைகள்: அரிசி, கோதுமை, மற்றும் கம்பு (bajra) போன்ற தானிய வகைகளில் நார்ச்சத்தும் காம்ப்ளக்ஸ் (complex) கார்போஹைட்ரேட்களும் அதிகம் உள்ளன. துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் ப்ரோட்டீன் சத்து, தசைகளை இயக்க உதவும் இரும்புச் சத்து போன்றவை அதிகம்.

2. பயறு வகைகள் (Legumes): கொண்டைக் கடலை, கிட்னி பீன்ஸ் மற்றும் தட்டைப் பயறு போன்றவற்றில் ப்ரோட்டீன் மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கொண்டைக்கடலையில் முக்கிய வைட்டமின் B6 மற்றும் ஃபொலேட் (Folate) ஆகியவை உள்ளன.

3. ஃபிரஷ் வெஜிடபிள்ஸ் மற்றும் கீரை வகைகள்: தக்காளி, வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கு, வெங்காயம் மற்றும் கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகள் நார்ச்சத்தும் மற்ற வைட்டமின், மினரல்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் தரக்கூடியவை. காலே, பசலைக் கீரை மற்றும் முருங்கைக் கீரைகளில் கால்சியம், இரும்புச் சத்து உள்ளிட்ட மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் A, K ஆகியவையும், நார்ச்சத்துக்களும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
அம்மா, கிச்சன்ல உங்க வேலையை ஈஸியாக்கணுமா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!
Healthy food

4. ஃபிரஷ் ஃபுரூட்ஸ்: வாழைப்பழம், பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு போன்ற பழ வகைகளும் நார்ச்சத்து, வைட்டமின், மினரல்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் தரக்கூடியவையே. ஒரே ஒரு துண்டு பப்பாளிப் பழத்தில் உடலுக்குத் தேவையான அத்தனை வைட்டமின்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க பெரிதும் உதவி புரியும். ஆரஞ்சில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வைட்டமின் C சத்து அதிகம் உள்ளது.

5. முட்டை: முட்டைகளை ப்ரோட்டீன், வைட்டமின் B12, ச்சோலைன், செலீனியம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களின் பவர்ஹவுஸ் எனலாம். காலை உணவுடன் ஒரு முட்டை எடுத்துக் கொள்வது நாள் முழுக்க சக்தி குறையாமலிருக்க உதவும்.

6. பிளைன் யோகர்ட்: இதில் ப்ரோபயோட்டிக்ஸ், கால்சியம் மற்றும் ப்ரோட்டீன் சத்துக்கள் அதிகம்.

இச்சத்துக்கள், இரைப்பை குடல் ஆரோக்கியம் மேம்படவும் செரிமானம் சிறக்கவும் நல்ல முறையில் உதவி புரியும்.

மேலே கூறிய உணவுப் பொருட்களை உபயோகித்து எளிதில் செய்யக்கூடிய சில ரெசிபிகள் இதோ...

சன்னா சாட்: வேக வைத்த கொண்டை கடலை, வெங்காயம், தக்காளி, ஸ்பைஸஸ் சேர்த்து ஆரோக்கியம் நிறைந்த சாட் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
கைமணக்கும் சமையலுக்கு சில எளிய டிப்ஸ்!
Healthy food

வெள்ளரிக்காய் சாண்ட்விச்: பிரட் துண்டுகளுக்கிடையில் வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை நறுக்கி வைத்து புத்துணர்வு தரும் சாண்ட்விச் செய்யலாம்.

கிச்சடி: அரிசி பருப்பை பொடித்து, காய்கறிகள் சேர்த்து வேகவைத்து, நெய்யில் தாளித்து சுவையான கிச்சடி செய்யலாம்.

ஆலூ பரோட்டா: கோதுமை மாவில் சப்பாத்தி செய்து, இரண்டு சப்பாத்திகளுக்கு நடுவில் வேகவைத்து ஸ்பைஸஸ் சேர்த்து மசித்த உருளைக் கிழங்கை வைத்து ஸ்டஃப் செய்து சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ஆலூ பரோட்டாக்களை சுட்டெடுக்கலாம். இதற்கு பிளைன் யோகர்ட் தொட்டு சாப்பிட்டால் ஆரோக்கியம் மேலும் கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com