இந்த மூலிகை எலும்பு முறிவையே சரி செஞ்சுடுமாமே! 

aruvatha Plant
aruvatha Plant
Published on

பாரம்பரிய மருத்துவ முறைகள் இயற்கையோடு இணைந்த வாழ்வின் சான்றுகளாக இன்றும் விளங்குகின்றன. அன்றைய காலகட்டத்தில், நோய்களை குணப்படுத்தவும், உடல் நலத்தை பேணவும் மூலிகைகளே பிரதான ஆதாரமாக திகழ்ந்தன. அவ்வாறு நம் முன்னோர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட ஒரு அற்புத மூலிகைதான் அருவதா. இது சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படுகிறது.

அருவதா செடியின் தாயகம் வெளிநாடுகள் என கூறப்பட்டாலும், நமது நாட்டின் காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் இது செழித்து வளர்கிறது. சுமார் மூன்றடி உயரம் வரை வளரக்கூடிய இந்த செடியின் இலைகள், முருங்கை இலைகளைப் போல சிறியதாக தண்டுகளில் அமைந்திருக்கும். மஞ்சள் நிற பூக்களைக் கொண்ட இந்த தாவரம், வறட்சியான சூழ்நிலைகளிலும் நன்கு வளரக்கூடியது.

இதன் இலைகள், வேர்கள், மற்றும் காய்கள் என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதனால் இது வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இந்த செடி இருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அருவதா இலைகள் எலும்பு முறிவு மற்றும் தண்டுவட பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. தண்டுவட வலி மற்றும் முதுகு வலி போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். சிறுநீர் பாதை எரிச்சல் மற்றும் அடைப்பு போன்ற உபாதைகளுக்கும் இது சிறந்த மருந்தாக அமைகிறது. மேலும், பெண்களின் கருப்பை தொடர்பான பிரச்சினைகளையும் இது குணப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
முதியோர்களின் குளிர்கால முழங்கால், மூட்டு வலி குறைய சில ஆலோசனைகள்!
aruvatha Plant

மூட்டு வலியை குணப்படுத்தும் ஆற்றல் இந்த இலைகளுக்கு உண்டு. மன அழுத்தத்தால் ஏற்படும் நரம்பு பாதிப்புகளை சரிசெய்து இரத்தத்தை சுத்திகரிக்கவும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் இது உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும், உடல் சூட்டை தணிக்கவும் அருவதா உதவுகிறது. இதனால் ஏற்படும் வாத வலி மற்றும் வயிற்று வலிக்கும் இது நிவாரணம் அளிக்கிறது.

சுளுக்கு மற்றும் மூட்டு பிறழ்வு போன்ற பிரச்சினைகளுக்கும் இது சிறந்த பலன் அளிக்கிறது. மேலும், மூல வியாதி மற்றும் புற்றுநோய் போன்ற உடல் அணுக்களை பாதிக்கும் நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது. சுவாசக் கோளாறுகளை சரி செய்வதிலும் அருவதா முக்கிய பங்கு வகிக்கிறது.

அருவதா இலைகளை பூண்டுடன் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் சமைத்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது மூட்டு வலி, சிறுநீர்ப்பை அடைப்பு, மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உலர்ந்த அருவதா இலைகளை பொடியாக்கி, அதிமதுரம், சதகுப்பை, கருஞ்சீரகம், மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மூலிகைப் பொடிகளுடன் கலந்து, பணங்கற்கண்டு சேர்த்து தினமும் உட்கொள்வது உடல் சூட்டை தணிக்கும்.

இதையும் படியுங்கள்:
எதிர்மறை எண்ணங்களை விரட்டி, மன அமைதி பெறும் 5 வழிகள்!
aruvatha Plant

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அருவதா இலைகளை அரைத்து மிளகுத்தூள் சேர்த்து தினமும் உட்கொள்ளலாம். இது மனநிலையை மேம்படுத்த உதவும். குழந்தைகளுக்கு ஏற்படும் மார்பு சளியை போக்க, அருவதா இலைச்சாறை தேனுடன் கலந்து கொடுக்கலாம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அருவதா இலைகளை அரைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். நரம்பு சுருட்டல் மற்றும் மூட்டு வலிக்கும், இந்த இலைகளை கொதிக்க வைத்த நீரை பருகலாம். இது குடல் புழுக்களை அழித்து, இரத்த நாள அடைப்புகளை நீக்கும்.

ஞாபக சக்தியை அதிகரிப்பது மற்றும் கண் வீக்கம் மற்றும் வலியை குறைப்பது போன்ற பல்வேறு நன்மைகளையும் அருவதா கொண்டுள்ளது. ஆக, அருவதா ஒரு அற்புத மூலிகை என்பதில் ஐயமில்லை. இதன் மருத்துவ குணங்களை முறையாக பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com