ஆரோக்கியத்தை அள்ளித் தரும் அஸ்வகந்தா! 

Ashwagandha benefits
Ashwagandha benefits

கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை வைத்தியம் மற்றும் பாரம்பரிய மூலிகைகள் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அப்படி மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்ற மூலிகைகளில் அஸ்வகந்தாவும் ஒன்று. இது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பதிவின் மூலமாக அஸ்வகந்தாவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த உண்மைகளை நாம் தெரிந்து கொள்வோம். 

1. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கும்: அஸ்வகந்தாவுக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை எதிர்த்துப் போராடும் தன்மை உள்ளது. அஸ்வகந்தா உணவுகளை உட்கொள்வதால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்ட்டிசோல் அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ரசாயனத்தை கட்டுப்படுத்துவது மூலமாக அஸ்வகந்தா, அமைதி மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்வுகளைக் குறைத்து ஒட்டுமொத்த மனநலனையும் மேம்படுத்தும். 

2. அறிவாற்றல்: அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவது அஸ்வகந்தாவின் மற்றொரு குறிப்பிடத்தக்க நன்மைகளில் ஒன்றாகும். அஸ்வகந்தா புத்திக் குர்மையை அதிகரித்து, ஞாபக சக்தியை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. இது நரம்பு செல்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதால் மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறது.

3. ஆற்றலை அதிகரித்து சோர்வைக் குறைக்கும்: பாரம்பரியமாகவே இயற்கையான ஆற்றல் ஊக்கியாக அஸ்வகந்தா பயன்படுத்தப்படுகிறது. இது உடல் ஆற்றலை அதிகரித்து, சோர்வை எதிர்த்துப் போராடும். இதனால் நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பராமரித்து, உற்பத்தித் திறனை மேம்படுத்த முடியும். 

4. அழற்சி எதிர்ப்பு பண்புகள்: அஸ்வகந்தா சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். இதன் மூலமாக இதய நோய், நீரிழிவு மற்றும் சில வகையான புற்று நோய் பாதிப்புகளும் குறைவதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளிடையே பெருகிவரும் உடல் பருமன்: நாம் செய்ய வேண்டியது என்ன?
Ashwagandha benefits

5. ஹார்மோன் சமநிலை: நீண்ட காலமாகவே அஸ்வகந்தா ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. இது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை கணிசமாக அதிகரிப்பதால், விந்தணுக்களின் தரத்தை உயர்த்தி கருவுறுதலை மேம்படுத்துகிறது. மேலும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை கட்டுப்படுத்தவும், மாதவிடாய் நின்ற அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும். 

6. நோயெதிர்ப்பு ஆற்றல்: நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் ஒரு வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு முக்கியமானது. அஸ்வகந்தா நமது நோய் எதிர்ப்பு அமைப்பை சிறப்பாக்கும் பண்புகளைக் கொண்டிருக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் சீராகி, பல்வேறு விதமான நோய்த்தொற்று பாதிப்புகளில் இருந்து உடல் எதிர்த்து போராட உதவுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி அஸ்வகந்தா பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், இதை முயற்சிப்பதற்கு முன்பு தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com