ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆஸ்துமா நோயாளிகள் ஜாக்கிரதை!

Holi Celebration.
Holi Celebration.

திங்கட்கிழமை இந்தியா முழுவதும் கோலாகலமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. வண்ணங்கள் நிறைந்த இந்தப் பண்டிகை இந்தியர்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடிய ஒரு பண்டிகையாகும். ஆனால் ஆஸ்துமா நோயாளிகள் முன்னெச்சரிக்கையாக சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

1. ஹோலி கொண்டாடுகையில் வண்ணம் பூசிக் கொள்வதற்காக அதிகமாக விளையாடும்படி இருக்கும். அப்போது Second wind (அதிகமான உடல் செயல்பாட்டால் மூச்சுத் திணறும்) நிகழ்வை ஏற்படுத்தக்கூடும். ஆகையால் அதிகமாக விளையாடுவதைத் தவிர்க்கவும். அதேபோல் அவ்வப்போது சிறிது நேரம் உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொள்வது அவசியம்.

2. பொதுவாக ஆஸ்துமா உள்ளவர்கள் ஒயின் மற்றும் பீர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதுவும் ஹோலி பண்டிகையில் சிவப்பு, ஒயிட் ஒயின் மற்றும் பீர் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக பழச்சாறு எடுத்துக்கொள்ளலாம்.

3. பொதுவாக ஆரோக்கியமான ஹோலி கொண்டாட்டத்திற்கே இது மிகவும் முக்கியமானதுதான். அதாவது மஞ்சள், ரோஸ் பவுடர், பீட் ரூட் பவுடர் போன்ற இயற்கையான நிறப் பவுடர்களையே பயன்படுத்துங்கள். குறிப்பாக செயற்கை நிறப் பவுடர்கள் ஆஸ்துமாவின் அறிகுறிகளைத் தூண்டும். அதேபோல் மாஸ்க் அணிந்துக்கொள்வது நல்லது.

4. பொதுவாக அதிகமான சூரிய ஒளியில் யார் இருந்தாலுமே நாசிகளில் எரிச்சல் உண்டாகும். குறிப்பாக அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தீமைகளை விளைவிக்கும். ஆகையால் அவர்கள் அதிக சூரிய ஒளியிலிருந்து விலகியிருப்பது நல்லது.

5. நிறைய தண்ணீர் குடியுங்கள். இது உங்களின் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். குளிர்ந்த காற்றினால் ஆஸ்துமா அறிகுறிகள் வர வாய்ப்புள்ளது. ஆகையால் அந்த சமையத்தில் குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.

6. அதேபோல் ஆஸ்துமா உள்ளவர்கள் இன்ஹெலர்கள் அல்லது நெபுலைசர்கள் போன்றவற்றை எப்போதும் பையில் வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
'காஜி நேமு' என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
Holi Celebration.

7. புகையில் இருந்து விலகியிருப்பது நல்லது. எதையாவது எரித்து விளையாடும்போதோ அல்லது மெழுகுவர்த்தி புகையோ உங்கள் ஆஸ்துமா அறிகுறிகளைத் தூண்டச் செய்யும். ஆகையால் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.

இந்த ஏழு விஷயங்களைத் தெரிந்துக்கொண்டு முன்னெச்சரிக்கையாக இருங்கள். அதேபோல் வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் எங்கு எப்போது ஹோலி கொண்டாடப் போகிறீர்கள் என்பதைத் தெரிவித்துவிடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com