Avuri leaf Benefits!
Avuri leaf Benefits!

கல்லீரலை மேம்படுத்தும் அவுரி இலை!

Published on

வுரி இலை தலைமுடி, சருமம், உடல் உறுப்புகள் என அனைத்துக்குமே நன்மை தரும் ஒரு இலையாகும். மேலும், நமது கல்லீரலை பாதுகாப்பதில் இந்த இலை முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இலைகளை விழுதாக அரைத்து, ஆட்டு பாலில் கலக்கி வடிகட்டி குடித்தால் நல்ல தீர்வு கிடைக்கும் எனச் சொல்கின்றனர்.

குடலைப் பாதுகாத்து ஜீரண சக்தியை அதிகரிக்க இந்த இலைகள் பேருதவி புரிகின்றன. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் அவுரி இலையை மிளகு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். அல்லது இந்த இலைகளை அப்படியே வதக்கி சாப்பிட்டாலும் வயிறு சுத்தமாகும்.

வயிற்றில் உள்ள எல்லாவிதமான கெட்ட கிருமிகள், நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மை அவுரி இலைகளுக்கு உண்டு. அத்துடன் மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வாகவும் இது பார்க்கப்படுகிறது.

பாம்பு கடித்தவர்களுக்கு அவுரி இலைகளை பச்சையாக அரைத்து அப்படியே விழுங்கக் கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். பாம்பு நஞ்சை முறிக்கும் ஆற்றல் இந்த இலைக்கு இருப்பதால் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாம். மேலும், உடலில் கட்டிகள், வீக்கங்கள் ஏதாவது இருந்தால் இந்த இலையை அரைத்துக் கட்டலாம்.

இதையும் படியுங்கள்:
மூங்கில் குருத்தில் இருக்கும் முத்தான நன்மைகள்!
Avuri leaf Benefits!

இந்த இலை அனைத்துவிதமான சருமப் பிரச்னைகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவு ஏன்? தீக்காயங்களைக் கூட இது சரி செய்யும். அதுமட்டுமின்றி, பெண்களுக்கு அவுரி இலைகள் பல விதங்களிலும் உதவி புரிகிறது. முறையற்ற மாதவிடாய் பிரச்னை இருப்பவர்களுக்கு இது மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

தலை முடி பிரச்னைகளைத் தீர்க்கும் அற்புத ஆற்றல் அவுரி இலைகளுக்கு உண்டு. அதனாலேயே கூந்தல் வளர்ச்சிக்காக தயாரிக்கப்படும் எண்ணெய்களில் அவுரி இலை மற்றும் அதன் வேர் போன்றவை சேர்க்கப்படுகின்றன. மேலும், சில பல தைலங்களிலும் இவற்றை மூலப் பொருட்களாகப் பயன்படுத்துகிறார்கள்.

அவுரி இலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் அதன் பொடியை வாங்கியும் பயன்படுத்தலாம். இளநரை பிரச்னை இருப்பவர்கள் மருதாணி இலையுடன் அவுரி பொடி கலந்து தலைக்குத் தடவினால் தலை முடி கருப்பாக மாறும். இப்படி பல ஆரோக்கிய குணங்கள் அவுரி இலைக்கு உண்டு.

logo
Kalki Online
kalkionline.com