

எளிய மருத்துவ குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது குழந்தைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான குறிப்புகள் இதோ:
* சில குழந்தைகளைப் பார்த்தால் வயிறு பெருத்து உடல் சிறுத்து இருப்பார்கள். அவர்களுக்கு கோரைக்கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுத்தால் சரியாகும்.
* கோரைக்கிழங்கை தோல் நீக்கி அவித்து அந்த நீரை குழந்தைகளுக்கு கொடுத்தால் நாள் பட்ட வயிற்றுப்போக்கு நீங்கும்.
* பனங்கிழங்கை அவித்து காய வைத்து இடித்து தூள் செய்து ஒரு சிட்டிகை பனங்கிழங்கு தூளுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிட கொடுத்து வர கணைச் சூடு நீங்கும்.
* குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் இருந்தால் வேப்பிலை கொழுந்தை இடித்து அதன் சாற்றுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுத்து வர இரண்டு நாளில் சரியாகும்.
* காய்ந்த திராட்சை பழங்களை எடுத்து பசும்பாலில் ஊற வைத்து பின்னர் அந்த பழத்தை அழுத்தி பிழிந்தால் சாறு இறங்கும். அந்தச் சாற்றை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் மலச்சிக்கல் தீரும். பெரியோர்களும் கொஞ்சம் அதிகமாக சாப்பிட குணம் கிடைக்கும்.
* நாட்டு மருந்து கடைகளில் சீனாக்காரம் என்ற பொருள் கிடைக்கிறது. அதை வாங்கி வறுத்துப் பொடி செய்து தொப்புள் புண் மீது தூவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் தொப்புள் புண் குணமாகும்.
* பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இவைகளை தினசரி சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தி பெருகும்.
* குழந்தைகளுக்கு சொரி, சிரங்கு, படை வந்து அல்லல்படுத்தும். அதற்கு உருளைக்கிழங்கு தோலை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, படை மீது போட குணமாகும்.
* சிறுவர்களுக்கு தொண்டையில் சதை வளர்வதை தடுக்க திருநீற்று பச்சை இலை உடன் சிறிது மிளகு சேர்த்து மைய அரைத்து கொடுத்து வர சரியாகும்.
* தேவையில்லாத மருந்தை தெரியாமல் சாப்பிட்டு விட்டால் உடனே அதற்கு வாழைப்பழம் சாப்பிட்டால் மருந்தை முறித்து விடும்.
* கேரட், பசுவின் பால், தேன் மூன்றையும் வகைக்கு ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிடுவதுடன், வெண்டைக்காயுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை (நாட்டு மருத்துவரை) அணுகவும்)