
"ஒருவர் சாப்பிடும் உணவுதான் அவர் எப்படிப்பட்டவராக இருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்கிறது" என்பார்கள். நாம் சுலபமாக உணவை வாய் வழியே வயிற்றில் அனுப்பி விட்டாலும் செரிமான மண்டலத்தை அடைந்த பிறகு அந்த உணவு பல்வேறு வடிவங்களை எடுத்து உடல் முழுவதும் பரவுகிறது. நல்ல உணவு நல்ல வடிவங்களையும் கெட்ட உணவு கெட்ட வடிவங்களையும் எடுத்து பரவுவதால் நம் ஆரோக்கிய வாழ்வு அதையே சார்ந்திருக்கிறது.
இப்படி உடலை தீர்மானிக்கும் நீதிபதியான சரிவிகிதமாக சத்துக்கள் கொண்ட ஆரோக்கியமான உணவை உண்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
உடல் எடையும் அளவாக இருக்கும். அவர்கள் எப்போதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
சரிவிதமான உணவு நம் உடலில் எல்லா பாகங்களுக்கும் எப்படி ஊட்டம் தருகிறது என பார்ப்போம்.
நம் தலைமுடியும், நகங்களும் உறுதியாக இருக்க - வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் தேவை. இவற்றோடு போலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் ஜிங்க் சத்தும் கொண்ட உணவுகள் வேண்டும்.
மூளையின் சக்தி அதிகரிக்க - ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், ஃபோலிக் அமிலமும் தேவை. இவற்றோடு வைட்டமின்களில் ஈ, பி 6, சி, பி12, மற்றும் டி சத்துக்கள் கொண்ட உணவுகள் உதவும்.
கூர்மையான கேட்கும் திறன் அதிகரிக்க - ஃபோலிக் அமிலம், பயோட்டின், வைட்டமின்களில் ஏ ,சி, மற்றும் பி12 நிறைந்த உணவுகள் தேவை.
துல்லியமான பார்வைத் திறன் அதிகரிக்க வைட்டமின்கள் சி, ஏ, ஈ மற்றும் பி12 நிறைந்த உணவுகள் தேவை.
ரத்த அழுத்தம் சீராக இருக்க - கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி மற்றும் டி கொண்ட உணவுகள் சாப்பிட வேண்டும்.
ஆரோக்கியமான இதயத்திற்கு - ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின்களில் பி6, ஈ, சி , டி போன்றவையும் தேவை.
நுரையீரலின் சுவாசத்திறன் இயல்பாக இருக்க - வைட்டமின்கள் டி, சி, ஈ மற்றும் ஏ நிறைந்த உணவை சாப்பிட வேண்டும்.
உடலில் நல்ல கொழுப்பு அளவாக இருக்க - நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கரோட்டினாய்டுகள் வைட்டமின் சி, ஈ போன்றவை வழி செய்யும்.
ஆரோக்கியமான செரிமானத்துக்கு - நியாசின், நார்ச்சத்து,வைட்டமின்கள் பி12 நிறைந்த உணவுகள்.
கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு - வைட்டமின் பி12 மற்றும் ஏ உதவும்.
வலிமையான நோய் எதிர்ப்பு சக்திக்கு - வைட்டமின் ஏ, சி, டி மற்றும் பி காம்ப்ளக்ஸ் நிறைந்த உணவு தேவை.
ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க - வைட்டமின்கள் சி, டி மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்றவை உதவுகின்றன.
சிறுநீரகமும் சிறுநீர்ப்பையும் நன்றாக செயல்பட - வைட்டமின் பி6, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் அளவாக இருக்கும் உணவுகள் தேவை.
சருமத்தை அழகாகவும் இளமையாகவும் வைத்திருக்க - வைட்டமின்கள் ஏ, சி, டி, ஈ மற்றும் பயோட்டின் போன்றவை நிறைந்த உணவுகள் உதவும்.
கருப்பை வலுவாக்கவும் கருவுறுதலை துரிதப்படுத்தவும் - ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இரும்புச் சத்து, மற்றும் கால்சியம் நிறைந்த உணவு உதவுகிறது.
உடல் தசைகள் வலிமையாக இருக்க - வைட்டமின்கள் பி12, ஈ, ஏ, மற்றும் இரும்பு சத்து தேவை.
மூட்டுக்கள் வலிமையாக இருக்க - கால்சியம் வைட்டமின்கள் சி, டி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் தேவை.
பலமான எலும்புகளை பெற - வைட்டமின் டி, கால்சியம் / மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை கொண்ட உணவு சாப்பிட வேண்டும்.
உடலின் சக்தியை அதிகப்படுத்துவதற்கு வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.