கோடைக் காலத்தில் பப்பாளி பழம் சாப்பிடலாமா?

பப்பாளி பழம் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும், என்றாலும் கோடையில் சிலர் பப்பாளிப் பழம் சாப்பிடத் தயங்குகின்றனர்.
papaya fruit!
papaya fruit!
Published on

பப்பாளி பழம் பல ஆரோக்கிய நன்மைகளை அதனுள் கொண்டுள்ளது. இதை சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும், என்றாலும் கோடையில் சிலர் பப்பாளிப் பழம் சாப்பிடத் தயங்குகின்றனர். காரணம் பப்பாளிப் பழம் சூட்டைக் கிளப்பி விடும் என்று சொல்லி தவிர்க்கின்றனர்.

வெயில் காலத்தில் ஏற்படும் கடுமையான வெப்பம் பல உடல்நலக் கோளாறுகளை கொண்டு வரும். பலரும் இக்காலக் கட்டத்தில் வயிறு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். பப்பாளி இயற்கையில் காரத் தன்மை கொண்டது. அதனால் கோடையில் பப்பாளி சாப்பிடலாமா வேண்டாமா என்று பலருக்கும் குழப்பம் உள்ளது.

குழப்பங்கள் இருந்தாலும் பப்பாளி பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான். பப்பாளி பழத்தில் பப்பேன் என்ற நொதி உள்ளது. இது புரதங்களை உடைக்க உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி சாப்பிடுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
பப்பாளி பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும்!
papaya fruit!

பொதுவாக உணவியல் நிபுணர்கள் பப்பாளி பழம் குளிர்ச்சியானது என்று கூறுகிறார்கள். இயற்கையில் இது சற்று காரமானதாக இருந்தாலும் உடல் சூட்டினை குறைக்கும் என்கிறார்கள். குறிப்பாக பழுத்த பப்பாளிப் பழம் சாப்பிடும்போது அதிக நன்மைகளை தருகிறது. இந்த பழத்தில் அதில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது .

தினசரி பப்பாளி பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு சிறந்ததாக இருக்கும். இது மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. பப்பாளியில் உள்ள நொதிகள் வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. இதனுடன், சருமத்தை பளபளப்பாக்கவும் இது உதவுகிறது. எடை இழக்க முயற்சிப்பவர்களுக்கு பப்பாளி ஒரு நல்ல தேர்வாகும், ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கோடையில் பப்பாளியுடன் மோர், தயிர், வெள்ளரிக்காய் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. இதனால் உடலின் வெப்ப நிலையை குறைத்து சமநிலைப்படுத்த முடியும்.

கோடையில் பப்பாளி பழத்தை குறிப்பிட்ட அளவு மட்டும் சாப்பிட வேண்டும். பப்பாளி பழம் ஒவ்வாமை உள்ளவர்கள், சாப்பிட்ட பிறகு வயிற்றில் எரிச்சல் உள்ளவர்கள், பப்பாளி சாப்பிடக் கூடாது. அமிலத்தன்மை அல்லது வயிற்று எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடக்கூடாது. பப்பாளி இயற்கையிலேயே காரமானது. எனவே அதை அதிகமாக சாப்பிடுவது சிலருக்கு அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின்   ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்! 
papaya fruit!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com