ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு தேன் கலந்து உட்கொள்வது மாதவிலக்குப் பிரச்னைகளுக்கும், வெள்ளைப்படு நோய்க்கும் தரப்படும் சிறந்த மருந்தாகும்.
ஆலமரத்தின் இலைகள், முடி உதிர்வதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.
ஆல இலைகளை எரித்து அதன் சாம்பலை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடுவது வெட்டை நோய்க்கு நிவாரணமாக அமைகிறது.
ஆலமர இலைகளை லேசாக வதக்கி, கட்டிகளுக்கு வைத்துக் கட்ட, விரைவாக கட்டி பழுத்து உடையும்.
மூட்டுவலி, வீக்கங்களுக்கும் இதை பற்றாக உபயோகிக்கலாம்.
ஆலமரத்தின் கொழுந்து இலைகளை அரைத்து, சிறிதளவு எருமைத் தயிரில் கலந்து குடிக்க சீதபேதி, கழிச்சல் ஆகியவை குணமாகும்.
ஆல இலையை சாறாகப் பிழிந்து, அதனுடன் சிறிது வெந்தயப் பொடி கலந்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட நீரிழிவு நோய் கட்டுப்படும்.
ஆல மர இலையில் இருந்து எடுக்கும் சாறை சரும பராமரிப்பிற்கு உபயோகிக்கலாம். இச்சாற்றினை கற்றாழையோடு கலந்து உபயோகித்தால் சரும ஒவ்வாமைகள் குணமடையும். மேலும் பாலோடு கலந்து உபயோகித்தால் முகப்பரு மற்றும் கசிவுகளில் இருந்து விடுபடலாம்.
ஆல இலைகளை நிழலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் அதைக் கொண்டு பல் தேய்த்தால், பற்கள் பளபளப்பாக இருப்பதோடு, ஈறுகளும் உறுதி பெறும்.
பழுத்த ஆல இலையை சுட்டு, சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் குழைத்து, சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்களுக்கு பூசி வர, விரைவில் குணமாகும்.
ஆல மர இலைகளை எரித்து , ஆளி விதை எண்ணெய்யில் குழைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தடவிவந்தால் அந்த இடத்தில் விரைவில் முடி முளைக்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்கள், ஆலமர விதைகளையும், கொழுந்து இலைகளையும் சேர்த்து அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்தால், தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)