அல்சரை குணப்படுத்தும் பரங்கிக்காய்!

பரங்கிக்காய்
பரங்கிக்காய்
Published on

ல்சர் எனப்படும் குடல் புண் நம்மில் பெரும்பாலானோருக்கு உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் நம் உணவு பழக்க வழக்கம்தான். குறிப்பாக, துரித உணவு எனப்படும் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுபவர்களுக்கு இந்த அல்சர் அதிக அளவில் வருகிறது. அல்சர் நோயை குணப்படுத்த முடியுமா என்று நீங்கள் யோசிக்கலாம். மிகவும் எளிதான முறையில் பரங்கிக்காயை உண்கொண்டு இந்தப் பிரச்னையை குணமாக்கலாம். அது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

பரங்கிக்காய் மஞ்சள் நிறத்தில் இனிப்பு சுவைடன் இருக்கும். இதை அரசாணிக்காய், மஞ்சள் பூசணி, சர்க்கரை பூசணி என்றும் அழைப்பர். நகரத்தில் இருப்பவர்கள் இதை அதிகம் சாப்பிடுவதில்லை. கிராமங்களில், பரங்கிக் காயின் மருத்துவ குணம் அறிந்தவர்கள் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். இன்றைக்கும் பூசணியில் பொரியல் மற்றும் கூட்டு செய்வதை விட அல்வாதான் அதிகம் செய்கின்றனர். அதிலும் பரங்கிக்காய் அல்வா மிகவும் தித்திப்பாக இருக்கும். கல்யாண விருந்துகளில் பரங்கி அல்வா பரிமாறப்படுகிறது.

பரங்கிக்காயின் பூர்வீகம் வட அமெரிக்கா. பரங்கி என்பது ஒரு தாவரத்தின் பெயர். இது சமையலுக்கு மட்டுமல்ல, விதையாகவும் எண்ணெயாகவும் கூட இது பயன்படுகிறது. தமிழகத்தில் பரங்கி பரவலாக விளையக்கூடிய காயாகும். இது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டது. மெகா சைஸ் பரங்கிக்காய், 30 கிலோ எடை வரை கூட இருக்கும். இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இதற்கு இப்படியொரு நிறத்தைக் கொடுப்பது, அதன் தோல் மற்றும் உள்ளே உள்ள சதைப் பகுதி. இதன் தோல் பகுதி அழுத்தமாகவும் எடையற்றதாகவும் இருக்கும். மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பு இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன. குறிப்பாக, இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம் உள்ளன.

மணல்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
துப்புரவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மூட் அவுட்டை துரத்துமா? எப்படி?
பரங்கிக்காய்

இக்காய் பித்தம் போக்கும், பசியை தூண்டும், சிறுநீர் பெருகும், இது வீரிய புஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் பொருமல், வாய்வு, வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். பரங்கி விதைகளில் நார்ச்சத்து உள்ளது. இதில் இருக்கும் ஒரு வகை கொழுப்பு அமிலம், இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ஒரு டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது.

பரங்கிக் காயில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் நோய்க்கு இது நல்ல மருந்தாகத் திகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com