பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும் பாரிஜாதம் எனப்படும் பவழமல்லி!

பவழமல்லி...
பவழமல்லி...

வழமல்லிப் பூக்கள் மட்டுமின்றி இலைகள் பட்டைகளும் பல் வேறு நன்மைகள் தருகிறது.

இப்பூக்களில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடலில் உள்ள செல்களுக்கு ஆக்சிடேஷன் பாதிப்பை தடுத்து இளமையாக வைக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்பு உடல் உறுப்புகளில் ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் அழற்சிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது. பாக்டீரியா நுண்கிருமியால் உண்டாகும் தொற்றை நீக்குகிறது.

சியாடிகா என்பது இடுப்பின் பக்கவாட்டின் பகுதியிலிருந்து கணுக்கால் வரை நீளும் நரம்பில் ஏற்படும்  அழற்சி மற்றும் வீக்கம் ஆகியவற்றால் உண்டாகும் தீவிரமான வலியாகும். பவழமல்லி இலைகளை கொதிக்க வைத்து  வடிகட்டி அந்த நீரைக் குடிக்க சியாடிகா வலி குறையும்.

பவழமல்லி பட்டை இலைகள் மற்றும் பூக்கள் இவற்றை தண்ணீரில் சேர்த்து டிகாக்ஷன் மாதிரி தயாரித்து வாரத்தில் மூன்று நாட்கள் குடித்து வர மூட்டுவலி குறையும்

இந்த மரத்தின் இலைகளை நன்கு அரைத்து  எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட  வறட்டு இருமல் நீங்கும்.

பவளமல்லியின் இலைகள் தலையில் ஏற்படக்கூடிய புழுவெட்டுக்குச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் இலைகளை அரைத்து ஹேர் மாஸ்க்காக பயன்படுத்த புழு வெட்டு மறையும்

பவழமல்லிப் பூக்கள் இரைப்பை கோளாறு மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு உதவுகிறது. 

இப்பூக்களில் எத்தனால் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதன் ஆன்டி க்ளைசீமிக் தன்மை உடலில் இரத்தச் சர்க்கரையைக் குறைக்கிறது.

சருமம், முடி ஆரோக்கியத்துக்கு பேரி கற்றாழை!

பேரி கற்றாழை  என அழைக்கப்படும் Prickly pear பழம் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்குச் சிறந்தது இதை இந்திய கிவி என்றும் கூறுகிறார்கள்.

1.  இதில் ஆன்டிஆக்சிடணட்ஸ் உள்ளதால் ஃப்ரீ

 ராடிகல்களை எதிர்த்துப் போராடும். பளபளப்பான தோல் அழகைத் தருகிறது. வயதான தோற்றத்தைத் தடுக்கிறது.

2. இதில் நீர் சத்து அதிகம் உள்ளதால் உடலை ஈரப்பதத்துடன் வைக்கிறது.

3. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள்  உள்ளதால் தோலில் அரிப்பு தடிப்பு மற்றும் தோல் சிவத்தலை தடுக்கிறது.

4. இதன் சி சத்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் உடலை இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.

5. அலட்ரா வயலெட் கதிர் வீச்சில் இருந்து காக்கிறது. 

6. முகம் பளபளப்பாகவும்  முடி அடர்த்தியாகவும் வளர உதவுகிறது

7. இதில் ஈ சத்து அதிகம் உள்ளதால் முடி உதிர்வது, மெலிதாவதைத் தடுக்கிறது.

8. குறைவான கலோரிகளும் அதிகமான ஊட்டச்சத்தும் நிறைந்ததால் எடைக்குறைப்பிற்குச் சிறந்தது. 

9. இதில் குறைந்த அளவே க்ளைசீமிக் குறியீடு இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

10. இதன் நார்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான மண்டலத்தை சீராக வைக்கிறது.

11. இதன்  பொடாசியம் மற்றும் மக்னீசியம் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது.

12.  இதன் ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com