பத்துவா கீரை: இந்தக் கீரையில் இவ்வளவு சத்துக்களா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Bathua Keerai
Bathua Keerai
Published on

த்துவா (Bathua) அல்லது சக்கரவர்த்திக் கீரை என்று அழைக்கப்படும் இக்கீரையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் 'பத்துமா, இல்ல இன்னும் கொஞ்சம் வேண்டுமா?' என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு மிகவும் ஏராளம். 'அப்படி என்னென்ன சத்துக்கள் இருக்கு' ன்னு கேட்கிறீங்களா? வாங்க, இந்தப் பதிவில் பார்ப்போம்.

பத்துவாவிலுள்ள அதிகளவு நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் மலச்சிக்கல், பேதி போன்ற வயிற்றுக் கோளாறுகளை குணமாக்கி, ஜீரண மண்டல இயக்கம் சிறப்பாக செயல்பட உதவி புரிகின்றன. வயிற்றுப் புண்களை குணமாக்கும் ஆற்றலும் கொண்டது.  பத்துவா இலைகளில் ஜூஸ் பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது அதிக நன்மை தரும். பத்துவா குறைந்த அளவு கலோரி கொண்டது. பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, துத்தநாகம், அமினோ ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்த அளவு கொண்டது. அவை கொழுப்பைக் குறைத்து, எடை குறைய உதவுகின்றன. வானிலை மாற்றத்திற்கு ஏற்ப, தேவையான நொயெதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றன.

சருமத்தில் ஏற்படும் வெடிப்பு மற்றும் மருக்களுக்கு காரணமாகும் இரத்தத்திலுள்ள அசுத்தங்களையும் நச்சுக்களையும் நீக்கி சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது பத்துவா.

அதிக நேரம் எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம். பத்துவாவிலுள்ள சிங்க் மற்றும் இரும்புச்சத்துக்கள் இக்குறைபாடுகளை நீக்கி, கண் ஆரோக்கியம் காக்கின்றன.

இதிலுள்ள வைட்டமின் C எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஆரோக்கியம் தருகின்றன. மற்றும் அதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி ஆக்சிடன்ட் குணங்களானது, இரத்தத் தந்துகிகள் (capillaries) சேதமடையும்போது துரிதமாக செயல்பட்டு அவற்றை சீர்படுத்துகின்றன. மூட்டு வலியையும் குணப்படுத்த உதவும்.

இதையும் படியுங்கள்:
இப்படியும் நடக்கலாமா? இந்த ஐடியா நல்லா இருக்கே...
Bathua Keerai

இதிலுள்ள அதிகளவு ஊட்டச் சத்துக்களும் கனிமச் சத்துக்களும் முடி உதிர்வைத் தடுக்கும்; முடிக்கு மிருதுத்தன்மையும் பளபளப்பும் தந்து ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவும். அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களும் பத்துவா கீரையில் உள்ளதால் உடலிலுள்ள எந்த விதமான குறைபாடுகளையும் எளிதில் நீக்கிவிடும் சக்தி கொண்டது.

பத்துவா கீரையை ஜூஸாகவும், பரோட்டா, கூட்டு போன்ற உணவுகளோடு சேர்த்து சமைத்தும், ரைத்தாவாக செய்தும் உண்ணலாம்.

நாமும் இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து உண்டு நன்மை பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com