மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் இன்றியமையாதது. மேலும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக இந்திய மற்றும் ஆசிய கலாச்சாரங்களில், பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய ஆரோக்கியப் பழக்கங்களில் வெந்நீர் குடிப்பதன் நன்மைகள், மதிக்கப்பட்டு வருவதுடன் நவீன ஆராய்ச்சிகள் இந்த நன்மைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன.
இன்றைய நவீன யுகத்திலும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அதேவேளையில் தண்ணீருக்கு பதிலாக வெந்நீரை பருகுவது நல்லதா? என்ற கேள்விக்கு, அதுவும் ஆரோக்கியத்திற்கு நல்லதே என்பது மருத்துவர்களின் பதிலாக இருக்கிறது.
காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான வெந்நீரை குடிப்பது உடலை மீண்டும் நீரேற்றமடைய செய்து கழிவுகளை வெறியேற்ற சிறுநீரக செயல்பாட்டை தூண்டிவிடும். வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க செய்யும். காலை உணவுக்கு முன்பு வெந்நீர் உட்கொள்வதால் பசியை கட்டுப்படுத்தவும் உதவிடும்.
காலை வேளையில் இந்த சூடான திரவத்தை உட்கொள்வது மூக்கு மற்றும் தொண்டை அடைப்பை தடுக்கும். தசைப்பிடிப்பு அல்லது தசை வலிக்கு இந்த வெப்ப நீர் இதமளிக்கும். குடல் இயக்கத்தை தூண்டும். இது மலச்சிக்கலை போக்கி, இரத்த ஓட்டத்தை சீராக்கி மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சியூட்டுகிறது. அதாவது மிதமான வெதுவெதுப்பான நீரை குடிக்கும்போது, நரம்பு மண்டலம் அமைதியாகி, மன அழுத்தம் குறையும்.
செரிமான நொதிகளை தூண்டி சிறந்த செரிமானத்திற்கு உதவும். வயிற்று உப்புசத்தை குறைக்கும். வயிறு உப்புசத்தைக் குறைப்பதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவக்கூடும். வெதுவெதுப்பான நீர் உணவுகளை எளிதில் உடைத்து, ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
அதேவேளையில் மிக சூடான நீரை அருந்துவது வாய், தொண்டை பகுதியின் மென்மைத்தன்மையை சேதப்படுத்தும். சில சமயங்களில் வயிற்றை எரிச்சலடைய செய்யலாம். அதாவது 60 டிகிரி செல்சியஸ் (140 டிகிரி பாரன்ஹீட்) விழித்தெழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை குடிப்பது போதுமானது.
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவது, தூக்கத்திற்குப் பிறகு உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், நீரேற்றம் செய்யவும் உதவுகிறது. இது ஆரோக்கியமான சிறுநீரகச் செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கிறது.
முக்கியமான முன்னெச்சரிக்கைகள்:
வெப்பநிலை முக்கியம்: இருப்பினும், உணவுக்குழாய் அல்லது தொண்டையில் எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க, நீர் கொதிக்கும் அளவில் சூடாக இல்லாமல் வெதுவெதுப்பாக அல்லது மிதமான சூட்டில் (Lukewarm) குடிப்பது சிறந்தது. அதிக சூடான நீர் வாய் மற்றும் உணவுக் குழாயை சேதப்படுத்தலாம்.
அளவுக்கு அதிகமாக அருந்துவதைத் தவிர்க்கவும்: குறுகிய நேரத்தில் அதிகப்படியான சூடான தண்ணீரைக் குடிப்பது நீர் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, சோடியம் அளவைக் குறைக்கும்.
உணர்திறன் மிக்க குடல் நிலைகள்: சிலருக்கு, இது முன்கூட்டியே இரைப்பை அமிலச் சுரப்பைத் தூண்டக்கூடும், உங்களுக்கு ஏற்கனவே அதிக அமிலத்தன்மை இருந்தால் இது அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும்.
உணவுக்குக் குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்: வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்துவது சில ஊட்டச்சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதைத் தடுக்கக்கூடும், எனவே உணவுக்குக் குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்போ அல்லது பின்போ வெந்நீர் அருந்துவது சிறந்தது.
காலையில் எழுந்த 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு துண்டு எலுமிச்சையுடன், ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் வெந்நீர் அருந்தப் பரிந்துரைக்கப்படுகிறது.
நீர் சூடாக இருந்தாலும் சரி அல்லது குளிராக இருந்தாலும் சரி, மக்கள் தங்கள் உடலில் போதுமான நீர்ச்சத்தை நிலைநிறுத்திக்கொள்வதும், நிறைய நீர் அருந்துவதும் மிகவும் முக்கியமாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)