ஆப்பிள் சீடர் வினிகர் என்பது புளித்த ஆப்பிள் சாறு, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் ஒன்று.
இதனை மக்கள் செரிமானம், நெஞ்செரிச்சல் உட்பட தலைமுடி சரும பராமரிப்பு, கல்லீரல் கொழுப்பு கரைவதற்கு என பலவற்றிற்கு பயன்படுத்துகின்றனர்.
ஆப்பிள் சீடர் வினிகர்: இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் ரத்த செல்களின் கிருமிகள் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. தேன் கலந்து சாப்பிட்டால் ஆஸ்டியோபோரசிஸ் என சொல்லக்கூடிய எலும்பு பிரச்னை குணமாகும் என கூறப்படுகிறது.
உடல் எடை குறைய:
ஆப்பிள் சீடர் வினிகர் உடல் எடையை குறைக்க விரும்பும் பலர் எடுத்துக் கொள்கின்றனர். தினமும் சாப்பிடுவதற்கு முன்னால் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து அருந்தினாலும் குறைந்த கலோரி உடைய உணவுகள் எடுத்துக் கொள்வதாலும் உடல் எடை விரைவாக குறைவது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த
உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவி புரிகிறது. நீரிழிவுக்கு மருந்தாக பயன்படுத்த முடியாது. எனினும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
கொழுப்புச்சத்து குறைய
உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைப்பதில் ஆப்பிள் சீடர் வினிகர் பயனளிப்பதாக கூறப்படுகிறது. உடல் எடையை குறைப்பதுடன் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. இடுப்பு பகுதியில் தேவையில்லாமல் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கவும் உதவுகிறது.
பலர் வயிற்று எரிச்சல் நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு, நிவாரணமாகவும் தலையில் பொடுகு தொல்லை நீங்கவும் இதனை பயன்படுத்துகின்றனர்.
இதனை தண்ணீரில் கலந்து மட்டுமே குடிக்க வேண்டும்.
தொப்பை குறைய
தொப்பையால் அவதிப்படுபவர்களுக்கு இந்தப் பிரச்சினை குறித்து புரிந்து கொள்ள முடியும். அவர்கள் ஆப்பிள் சிடர் வினிகர் 1 டீஸ்பூன் நீரில் கலந்து அருந்தினால் சிறந்த தீர்வு தரும்.
குடிக்க எந்த நேரம் சிறந்தது?
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் குடிக்கக்கூடாது என்றும் சொல்லி வருகின்றனர். வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ் பூன் ஆப்பிள்சீடர் வினிகரை சிறிதளவு சேர்த்து, அதை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை வெகு விரைவில் குறையும்.
தினமும் காலை நேரத்தில் அருந்துவதால் நமது உடலில் தங்கி உள்ள நச்சுக்கள் விரைவில் நீக்கப்படுகிறது. அதன் காரணமாக உடல் புத்துணர்வு பெறுகிறது. உடலின் பிஹெச் அளவை கண்காணித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ஸ்டாமினாவை அதிகரிக்கச் செய்கிறது.
இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் ஆப்பிள் சீடர் வினிகரை மிதமாக உட்கொள்ள வேண்டும். எனினும் அதிகமாக உட்கொண்டால் தொண்டை எரிச்சல், வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து குடிக்கலாம்.
இதனை உணவில் சேர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. எளிதாக தண்ணீரில் கலந்து குடிக்கலாம் சாலட், சாஸ்களில் ,சூப்புகளில், சேர்த்து பயன்படுத்தலாம் . இதனை சிறிய அளவாக பயன்படுத்தலாமே தவிர அதிகப்படியாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)