கோவைக்காய் சமையல்: சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகள்

Tasty and healthy food
kovakkai Cooking ...
Published on

கோவக்காய் சாதம்

தேவை:

கோவக்காய் ,- அரை கிலோ

பெரிய வெங்காயம் - 2

சாம்பார் பொடி -1 டீஸ்பூன்

நிலக்கடலை - கால் கப்

எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு -1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு -2 டீஸ்பூன்

சீரகம் -1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

சாதத்தை வடித்து ஒரு அகன்ற பாத்திரத்தில் ஆறவிடவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் கோவக்காயையும் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும். பிறகு உப்பு, சாம்பார்பொடி போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். இடையிடையே கிளறிவிடவும். தனியே வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு நிலக்கடலையை வறுத்து கோவக்காய் கலவையுடன் சேர்க்கவும். கோவக்காய் வெந்தவுடன் அடுப்பை அணைத்து எலுமிச்சைச்சாற்றை விட்டு ஆறவிட்டு சாதத்துடன் கலக்கவும். சுவையான கோவைக்காய் சாதம் ரெடி.

******

கோவக்காய் சட்னி

தேவை:

கோவக்காய் - கால் கிலோ

வெங்காயம் - 5

பூண்டு பல் - 4

காய்ந்த மிளகாய் - 4

பச்சை மிளகாய் - 3

தனியா -1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

புளி - எலுமிச்சை அளவு

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - அரை டீஸ்பூன்

செய்முறை:

வெங்காயத்தை நீளமாக நறுக்கிகொள்ள வேண்டும். கோவக்காயை நன்கு அலசிவிட்டு இருமுனைகளையும் நீக்கி, நீள் வாக்கில் நன்றாக நறுக்கிகொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய்விட்டு நறுக்கிய கோவக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.

பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். கடுகு கறிவேப்பில்லை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவக்காய் சட்னி தயார இட்லி, தோசைக்கு இது பொருத்தமாக இருக்கும். சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

******

இதையும் படியுங்கள்:
ஈஸியா சமைக்கலாம்... டேஸ்ட்டா சாப்பிடலாம்: 4 காளான் ரெசிபிகள்!
Tasty and healthy food

கோவைக்காய் பிரியாணி

தேவை:

பாசுமதி அரிசி - ஒரு கப், கோவைக்காய் (வட்டமாக நறுக்கியது) - அரை கப், முட்டைகோஸ் துருவல் - ஒரு கப்,

பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2 (நறுக்கவும்), கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,

சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பஜ்ஜி மிக்ஸ் பவுடர் - 2 டீஸ்பூன்,

வர மிளகாய் - 5, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

நெய், எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

பாசிப்பருப்பை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடித்து நெய்யில் சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். பஜ்ஜி மிக்ஸில் சிறிதளவு நீர் விட்டுக் கரைத்து, கோவைக்காயை முக்கி எடுத்து சூடான எண்ணெய்யில் பொரித்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், சீரகம், கடலைப்பருப்பு தாளித்து... வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, முட்டைகோஸ் துருவல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஊறிய பாசிப்பருப்பு சேர்த்து, தேவையான நீர்விட்டு கொதிவந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடவும். வெந்ததும், பொரித்த கோவைக்காய் சேர்த்துப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். சுவையான கோவைக்காய் பிரியாணி ரெடி.

********

கோவைக்காய் துவட்டல்

தேவை:

கோவைக்காய் – 250 கிராம், பெரிய வெங்காயம் – 2, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
பலவகையான ரசப்பொடி தயாரிப்பது எப்படி? - எளிய சமையல் குறிப்புகள்!
Tasty and healthy food

செய்முறை:

கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, மிளகாய்த்தூள் சேர்த்து, வேக வைத்த கோவைக்காயையும் சேர்த்து மிதமான தீயில் வதக்கி எடுக்கவும். வித்தியாசமான சுவையில் கோவைக்காய் துவட்டல் தயார். இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சப்பாதிக்கும் தொட்டு சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com