மனம் விட்டு அழுவதால் இவ்வளவு நன்மைகளா? 

Crying Benefits
Crying Benefits

கண்ணீர் என்பது பெரும்பாலும் சோகம், பாதிப்பு, துயரத்துடன் தொடர்புடையது. இருப்பினும் அழுகை என்பது ஒரு இயற்கையான மற்றும் அத்தியாவசியமான மனிதப் பிரதிபலிப்பாகும். இது நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைத் தாண்டி பல நன்மைகளுக்கு உதவுகிறது. அவை என்னவென்று இந்தப் பதிவின் மூலமாகத் தெரிந்து கொள்வோம். 

உணர்ச்சியின் வெளிப்பாடு: அழுகையின் மிகவும் வெளிப்படையான நன்மைகளில் உணர்ச்சியை வெளிப்படுத்துவது அடங்கும். நாம் அழும்போது சோகமாகவோ, விரக்தியாகவோ, கோபமாகவோ, மகிழ்ச்சியாகவோ இருப்பதை கண்ணீர் வெளிப்படுகிறது. இது நம் உணர்வுகளை அங்கீகரித்து, மறைந்திருக்கும் உணர்வுகளுக்கு நிவாரணமளித்து சமநிலையை ஏற்படுத்துகிறது. 

மன அழுத்தம் குறையும்: அழுகை மன அழுத்த அளவைக் குறைப்பதாக சொல்லப்படுகிறது. கண்ணீரில் மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் உடலில் சேர்ந்துள்ள பிற கெட்ட விஷயங்களும் உள்ளன. இத்தகைய கண்ணீரை வெளியிடுவதன் மூலம் மன அழுத்தம் வெகுவாகக் குறைகிறது. இது நம் பாராசிம்பெட்டிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்தி உணர்ச்சி சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறதாம்.

மனநிலை மேம்பாடு: ஒரு நல்ல அழுகைக்குப் பிறகு நீங்கள் எப்போதாவது நன்றாக உணர்ந்ததுண்டா? ஏனெனில் அழுவது நம் உடலில் இயற்கையான நல்ல உணர்வு ரசாயனங்களான என்டோர்பின்களை வெளியிடுகிறது. இந்த ரசாயனம் நம் மனநலையை மேம்படுத்தி சோகம் பதற்றம் போன்ற உணர்வுகளைக் குறைக்கிறது.

பிணைப்பை அதிகரிக்கும்: அழுவது உறவுகளுக்கு மத்தியில் ஆழமான தொடர்பை வளர்க்கும். நாம் மற்றவர்கள் முன்னால் அழும்போது நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து பச்சாதாபத்தையும் ஆதரவையும் பெறுகிறோம். எனவே கண்ணீர் ஒரு சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு கருவியாக இருந்து மற்றவர் நம்முடைய உணர்ச்சி நிலையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. எனவே இதனால் ஆழமான பிணைப்புகளை உருவாக்கி உறவுகளை வலுபெறும். 

இதையும் படியுங்கள்:
உடல் வலிமையாக இருக்க இந்த கசப்பு உணவுகளையும் சாப்பிடுங்களேன்!
Crying Benefits

உடல் பலான்கள்: கண்ணீருக்கு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நம் கண்களை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கண்ணீர் நம் கண்களுக்கு வழவழப்புத் தன்மையைக் கொடுத்து ஊட்டமளித்து வறட்சியைத் தடுப்பதால், பார்வை தெளிவாகிறது. மேலும் தலைவலி சுவாசிப்பதில் சிரமம் போன்ற உணர்ச்சி துயரத்துடன் தொடர்புடைய உடல் அறிகுறிகளையும் தனிக்குமாம். 

இப்படி பல விதங்களில் நாம் அழுவது நமக்கு நன்மையை ஏற்படுத்துகிறது. எனவே அடுத்தமுறை உங்களுக்கு அழ வேண்டும் போல இருந்தால் அவற்றை கட்டுப்படுத்தாதீர்கள். உங்கள் உடலையும் மனதையும் லேசாக்க கண்ணீர் மிகச்சிறந்த அருமருந்து. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com