'மோர்'தானே என்ற அலட்சியம் வேண்டாம் பிரெண்ட்ஸ்...

உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் மோரின் சிறப்பு பயன்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
மோர்
மோர்
Published on

கோடையில் நமக்கு தாகம் ஏற்படும் போது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். தாகத்திற்கு தண்ணீர், அடுத்ததாக நம் முன்னோர்கள் மோர் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் மோரின் சிறப்பு பயன்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

வயிறு குளிரச் செய்கிறது

நாம் உண்ணும் உணவு பொருட்களில் சில சமயங்களில் காரம் அதிகமாக சேர்ந்துவிடும். அப்படிப்பட்ட உணவினை நாம் உண்ணும் போது வயிறு எரிச்சலில் அவதிப்படுவோம். இதனை சரி செய்ய ஒரு டம்ளர் மோர் குடித்தால் போதும். வயிற்று எரிச்சலில் இருந்து வயிறு குளிர்ச்சியாகும்.

செரிமானம் சரியாக

தயிரினை நாம் உண்ணும் மதிய உணவில் கடைசியாக சாப்பிடுவது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு பழக்கம். இதற்கு ஒரு முக்கிய காரணம் தயிரில் செரிமானத்திற்கு தேவையான அளவு, பாக்டீரியாக்கள் உள்ளன. தயிரை மோர் ஆக்கும் போதும் இந்த நன்மைகள் கிடைக்கின்றன. மோருடன் சிறிது, இஞ்சி, சீரகம் சேர்த்து குடித்து வந்தால் வயிறு உப்புசம் சீராகி விடும்.

கழிவுகள் வெளியேற

நாம் உண்ணும் உணவின் சக்தியை நம் உடலுக்கு முழுமையாக பெற்றுத்தர வைட்டமின் பி2 அவசியமாக தேவைப்படுகிறது. இந்த சத்தானது மோரில் அதிகம் உள்ளது. இது நம் வயிற்றில் உள்ள கல்லீரல் நன்றாக செயல்பட உதவுகிறது.

மோர் உடலில் தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றி உள் உறுப்புகளை தூய்மைப்படுத்தும். நம் உடலுக்கு சேராத விஷத்தன்மை இருந்தாலும் கூட அதனை நீக்கிவிடும்.

இது தவிர தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வருவதன் மூலம் வைட்டமின் குறைபாடு சரியாகும்.

அசிடிட்டி

நம்மில் பல பேர் அசிடிட்டி வந்து விட்டால் அதற்கு டானிக்கை சாப்பிடுவோம். ஆனால் வீட்டிலேயே உள்ள வைத்தியம்தான் மோர். அசிடிட்டியை குணப்படுத்த மோர் தவிர சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. ஒரு டம்ளர் மோருடன், மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை அரைத்து அதை மோரில் கலந்து குடித்தால் இப்பிரச்சனை தீர்ந்துவிடும்.

வயிற்றுப் போக்கு, மூலம் நீங்க

மூலநோய்க்கு ஒரு சிறந்த மருந்தாக மோர் பயன்படுகிறது. எவ்வித மசாலாக்களும் சேர்க்கப்படாமல் மோரில் சிறிது உப்பு மட்டும் கலந்து குடித்து வர மூலநோய் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் சாதாரண வயிற்றுப்போக்கை சரி செய்யலாம். சளி பிடிக்கும் என்பவர்கள் லேசாக சூடுபடுத்தி மஞ்சள் தூள் கலந்து குடித்தால் சளி பிரச்சனை வராது.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலை சமாளிக்க நீர் மோர் போதுமே!
மோர்

நீர்ச்சத்து அதிகரிக்க

மோருடன் சிறிது உப்பு கலந்து தினசரி நீர்க்க கரைத்து குடித்து வந்தால் நீர்ச்சத்து குறைபாடு நம் உடலில் ஏற்படாது. மோரில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் கோடை காலங்களில் உடலை வறட்சி நிலையிலிருந்து காக்கும்.

கோடை வெயிலை சமாளிக்க

தினமும் நீர் மோராக குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு வராது.

முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com