ஊறவைத்த வெண்டைக்காய் நீர் மற்றும் தேன்: ஆரோக்கியத்தின் இரகசியம்!

okra water with honey
Okra water with honey
Published on

கரையும் நார்சத்து வெண்டைக்காயில் உள்ளது. இது செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலைத்  தீர்க்கிறது. இதன் வழுவழுப்புத் தன்மை குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. பண்டைய மருத்துவத்தில் இது வயிற்றுப் போக்கு, அழற்சி மற்றும் வயிற்று வலிக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது.  வயிறு உப்புசம் மற்றும் அசிடிடியையும் குறைக்கிறது.

வெறும் வயிற்றில் இந்த நீரைக் குடிப்பதால் ரத்தச் சர்க்கரை கட்டுப்படுத்தப்படுகிறது. வெண்டைக்காயில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்சக் கூடிய பண்பு உள்ளது. மேலும் இதோடு குறைந்த க்ளைசீமிக் குறியீடு உள்ள தேனும் சேர்ந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்ததாகும். 

இதில் சிறந்த ஃப்ளேவினாய்டுகள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டிஆக்சிடண்ட்ஸ் உள்ளதால் கெட்ட கொலஸ்டிராலைக்  குறைக்கும். கொலஸ்டிராலைக் குறைப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். இதில் சேர்க்கப்படும் தேன் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, ஆக்சிடேடிவ் அழுத்தத்தையும் குறைப்பதால் இதயத்திற்கு மிகவும் சிறந்தது.

நீங்கள் உங்கள் எடையை இயற்கையாகக் குறைக்க சிறந்த பானமாகும். இதன் நார்சத்து வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. தேனின் இனிப்பு மற்ற இனிப்பு வகைகளை நாடச் செய்யாமல் தடுக்கும்.

இந்த பானத்தில் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். மேலும் ஆர்த்தரைடிஸ் மற்றும் நுரையீரல் சம்பந்த பிரச்னையும் தடுக்கப்படுகிறது.

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு இந்த கலவை மிகச் சிறந்தது. இது சிறுநீரக பிரச்னைகளைக் குறைக்கிறது. இப்பானத்தில் உள்ள தேன் நச்சுக்களை நீக்கி சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து அருந்துவதால் கிடைக்கும் 9 ஆரோக்கிய நன்மைகள்!
okra water with honey

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com