
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மஞ்சள் பொடி கலந்து தண்ணீரை செம்பு பாத்திரம் அல்லது டம்பளரில் குடிப்பதால் பல நன்மைகள் உண்டு. அவை என்னென்ன வென்பதை பார்ப்போம்.
மஞ்சளில் உள்ள குர்குமின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும். Brain Derived Neurotrophic Factory (BDNF) என்ற ஹார்மோனை குர்குமின் ஊக்குவிக்கிறது. இதனால் வயதானவர்களுக்கு மறதி நோய் ஏற்படாது. மேலும் ஃப்ரீ ராடிகல்களால் ஏற்படும் அழுத்தத்தையும் இது போக்கும்.
மஞ்சள் மற்றும் செம்பு இரண்டிலும் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் அதிகம் உள்ளன. வயதானால் ஏற்படும் அழற்சியை மஞ்சள் குறைக்கிறது. செம்பு உடம்பில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. ஆரோக்கியமான திசுக்கள் உருவாகி வழி செய்கிறது.
மஞ்சள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. இது உடலின் நச்சுக் கழிவுகளை நீக்கி ஹார்மோன்களின் சமச்சீரான நிலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகளை தீர்க்கிறது. செம்பில் மஞ்சள் கலந்த நீர் அருந்துவதால் தைராய்டு சரி செய்யப்படுகிறது.
மஞ்சள் அழற்சியைக் குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வயிறு உப்புசத்தைத் தடுத்து கெட்ட பாக்டீரியாக்களை நீக்கி செரிமான மண்டலத்தை சீராக்குகிறது.
மஞ்சள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோய்த் தொற்றுக்கள் இடமிருந்து காக்கிறது. செம்பில் இயற்கையாகவே பாக்டீரியாக்களை நீக்கக் கூடிய பண்பு உள்ளது. செம்பு பாத்திரம் அல்லது டம்பளரில் மஞ்சள் கலந்த தண்ணீர் அருந்துவதால் உடல் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.