தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் நபரா நீங்கள்? சூப்பர்!

Curd Mixed with Sugar
Benefits of Eating Curd Mixed with Sugar

உங்களுக்கு தயிர் சாப்பிடுவது அதிகம் பிடிக்குமா? அதுவும் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை விரும்பும் நபரா நீங்கள்? வாழ்த்துக்கள், இந்த பதிவு உங்களுக்காகத் தான்.

என்னதான் பாலில் இருந்து பல்வேறு விதமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும், ஆரோக்கியம் என்று வரும்போது தயிருக்குதான் முதலிடம். தயிரை தினசரி சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என சொல்லப்படுகிறது. குறிப்பாக தயிரில் நடக்கும் நொதித்தல் செயல்முறை, நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

வெறும் தயிரை சாப்பிடுவதைவிட, அதில் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் சில ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. 

தயிர், கால்சியம் சத்தின் சிறந்த மூலமாகும். இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமானது. சர்க்கரையுடன் தயிரை கலந்து உட்கொள்வது உங்களது கால்சியம் சத்துத் தேவையை பூர்த்தி செய்கிறது. எனவே வளரும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தில் உள்ள நபர்கள் இதை வழக்கமாக உட்கொள்வது நல்லது. 

தயிரில் கணிசமான அளவு புரதம் உள்ளது. இது பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமான மைக்ரோ நியூட்ரியன்டாகும். தசை வளர்ச்சியைத் தூண்டவும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கவும், ஆரோக்கியமான சருமம் முடி மற்றும் நகங்களை பராமரிக்கவும் புரதம் அவசியம். தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடுவதன் மூலம் ஒரு சுவையான புரதம் நிறைந்த உணவை உருவாக்கலாம். இது உங்களை புரதத்தை விரும்பி சாப்பிட ஊக்குவிக்கும். 

தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிடும்போது அது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது.‌ குறிப்பாக இப்படி சாப்பிடுவதால் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளில் இருந்து இரும்பு உடலால் உறிஞ்சப்படுவது மேம்படும். இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், இந்த வழிமுறையை பின்பற்றி ஆரோக்கியமாக இருக்கலாம். 

ஆயுர்வேத மருத்துவத்தில் தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. தயிர் மற்றும் சர்க்கரைக் கலவையானது உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரித்து, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும். 

இதையும் படியுங்கள்:
நமது பூமி கருந்துளையால் உறிஞ்சப்பட்டால் என்ன ஆகும் தெரியுமா? 
Curd Mixed with Sugar

எனவே, வாரம் இருமுறையாவது தயிர் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். என்னதான் இது உடலுக்கு நல்லது என்றாலும், உடற்பெருமனால் அவதிப்படுபவர்கள் இப்படி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இதில் அதிக கலோரி இருப்பதால், உங்களது உடல் எடையை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே சமச்சீர் உணவின் ஒரு அங்கமாக இதைப் பயன்படுத்துவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com