மாலை 5 மணி.. இரவு உணவு.. செம்ம ரிசல்ட்! 

eating
Benefits of eating dinner at 5pm.
Published on

இன்றைய காலத்தில் நம்முடைய உணவுப் பழக்கங்கள் பெரும்பாலும் ஒழுங்கற்றதாகவே இருக்கின்றன. குறிப்பாக, இரவு உணவை உண்ணும் நேரம் பலருக்கு ஒரு பெரிய குழப்பமாகவே உள்ளது. சிலர் இரவு 9 மணிக்குப் பிறகும் இரவு உணவை உண்கின்றனர். ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகள் மாலை 5 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவது நமது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் எனக் கூறுகின்றன. இந்தப் பதிவில் மாலை 5 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு விடுவதன் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.‌ 

மாலை 5 மணிக்குள் இரவு உணவை முடிப்பது எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதற்குக் காரணம் நாம் இரவு உணவை தாமதமாக உண்ணும்போது, உடல் அந்த உணவை முழுமையாக செரிமானம் செய்யாமல், கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கும். ஆனால், மாலை 5 மணிக்குள் உணவை முடித்து விட்டால், உடலுக்கு உணவை செரிமானம் செய்ய போதுமான நேரம் கிடைக்கும். இதனால், கலோரிகள் எரிக்கப்பட்டு எடை குறைப்பு ஏற்படும். 

சீக்கிரமாக இரவு உணவை முடித்து விடுவதால் விரைவில் நல்ல தூக்கம் உண்டாகும். இரவு உணவை தாமதமாக உண்ணும்போது செரிமான மண்டலம் இரவில் வேலை செய்யும். இதனால், மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்காமல் தூக்கமின்மை ஏற்படலாம். ஆனால், மாலை 5 மணிக்குள் உணவை முடித்துவிட்டால், செரிமான மண்டலம் இரவில் ஓய்வெடுக்கும். இதனால், நாம் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும்.‌ 

5 மணிக்குள் இரவு உணவை உட்கொள்வது செரிமானப் பிரச்சனைகளை குறைக்கும்.‌ இரவில் லேட்டாக சாப்பிடும்போது உடலில் அமிலத்தன்மை அதிகரித்து அஜீரணம், வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டால் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு செரிமானப் பிரச்சனைகள் குறையும். 

உங்கள் சருமம் பளபளப்பாக இருக்க இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுங்கள். இரவில் தாமதமாக சாப்பிடுவதால் உடலில் நச்சுப் பொருட்கள் அதிகரித்து சருமம் மங்குவதற்கு வழிவகுக்கும். எனவே, 5 மணிக்கெல்லாம் சாப்பிடும்போது உடல் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, சருமத்தை பொலிவாக வைத்திருக்கும். 

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோய்க்கு நல்லதொரு நிவாரணி நித்திய கல்யாணி!
eating

நீரிழிவு நோயாளிகள் முடிந்தவரை இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவது நல்லது. இதனால், நீரிழிவு நோய் தீவிரமடைவது தடுக்கப்படும். நீரிழிவு அல்லாதவர்களுக்கு அது ஏற்படுவதற்கான அபாயம் குறையும். இரவில், தாமதமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விரைவாகவே சாப்பிட்டு விட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். 

இரவு உணவை மாலை 5 மணிக்குள் சாப்பிடுவதால் மேலே குறிப்பிட்ட பல நன்மைகள் கிடைக்கும். எனவே இந்த பழக்கத்தை அனைவருமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இது மிகவும் முக்கியமானது என்பதால், கொஞ்ச காலத்திற்கு இதை பின்பற்றிதான் பாருங்களேன். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com