உங்களுக்கு இறுக்கமான உள்ளாடை அணியும் பழக்கம் இருக்கா? போச்சு!

tight inner wear
tight inner wear
Published on

சிலருக்கு உள்ளாடையை இறுக்கமாக அணியும் பழக்கம் இருக்கும். உள்ளாடைகள் நல்ல காற்றோட்டத்துடன் இருப்பதே ஆரோக்கியமானதாகும். இறுக்கமான உள்ளாடைகள் அணியும் போது அது நம் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1. இறுக்கமாக உள்ளாடை அணிவது நமது ரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

2. பிறப்புறுப்பு பகுதியில் சிறுநீர் பாதை நோய்த்தொற்று, ஈஸ்ட் மற்றும் பிற நுண்ணுயிர் நோய்த்தொற்றுகளின் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

3. சருமத்தில் அடிக்கடி தேய்த்து, உராய்வு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் சிவத்தல், அரிப்பு மற்றும் தடிப்புகள் கூட ஏற்படுத்தக்கூடும்.

4. ஆண்கள் இறுக்கமான உள்ளாடை அணிவதால், உயிரணுவின் உற்பத்தி மற்றும் அதன் தரத்தை பாதிக்கும். பெண்கள் இறுக்கமான உள்ளாடை அணிவதால், Vaginal infection ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறது.

5. இரவு தூங்கும் சமயம் இறுக்கமான உள்ளாடை அணிந்து தூங்குவதால், சரும எரிச்சல் மற்றும் புண் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

6. இறுக்கமான உள்ளாடையை அணியும் போது வயிற்றுப்பகுதி இறுக்கப்படுவதால்,  அமிலப்பின்னோட்டம் ஏற்பட்டு நெஞ்செரிச்சல் வரக்கூடும்.

7. பெண்கள் இறுக்கமான பிரா அணிவதால், ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் செல்களுக்கு குறைவான ஆக்ஸிஜனும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது.

8. அதிக நேரம் இறுக்கமான பிரா அணிந்திருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரக்கூடிய அபாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கான சரியான தீர்வு என்ன?

*எப்போதும் காட்டன் உள்ளாடைகளை அணிவது சிறந்தது. இது ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளக் கூடிய தன்மையைக் கொண்டது.

*உங்களுடைய சரியான அளவை காட்டிலும் சற்று பெரிதான உள்ளாடைகளை தேர்வு செய்வது நல்லது.

*உங்களுடைய உள்ளாடைகளை ஒருநாளைக்கு ஒருமுறையாவது மாற்றுவது பேக்டீரியாவால் ஏற்படும் நோய்த்தொற்றை தடுக்க உதவும்.

*அதிக நேரம் உள்ளாடைகள் மற்றும் Shape wearஐ அணிவதை தவிர்க்கவும்.

*இரவு தூங்கும் சமயம் உள்ளாடைகள் அணியாமல் இருப்பது சிறந்தது அல்லது தளர்வான உள்ளாடைகளை தேர்வு செய்து அணிவது நல்லதாகும்.

*இனி, உள்ளாடைகளை தேர்வு செய்து அணியும் போது இவற்றையெல்லாம் கவனத்தில் வைத்து கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
தர்பூசணி சாப்பிட ரொம்ப பிடிக்குமா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
tight inner wear

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com