
பாலுடன் தாமரை விதைகளை சேர்த்து ஊற வைத்து சாப்பிடும் போது சுவையை கூட்டுவது மட்டுமில்லாமல் எண்ணற்ற பலன்களையும் அள்ளித் தருகிறது. அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. பாலில் தாமரை விதைகளை ஊறவைத்து சாப்பிடுவது தசை வளர்ச்சிக்கு மிகவும் நல்லதாகும்.
2. பாலில் ஊறவைத்து தாமரை விதைகளை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். தாமரை விதையில் Polysaccharides உள்ளது, பாலில் வைட்டமின் டி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
3. இதய ஆரோக்கியம் மேம்பட பாலில் தாமரை விதைகளை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. தாமரை விதையில் குறைவான கொழுப்பு, கொலஸ்ட்ரால் இருக்கிறது மற்றும் பாலில் பொட்டாசியம் உள்ளதால், ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
4. தாமரை விதை சருமத்தில் உள்ள வயதான தோற்றத்தை போக்கும். பால் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கும். எனவே, இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
5. செரிமான பிரச்னைகள் குணமாக பாலுடன் தாமரை விதைகளை சேர்த்து சாப்பிடுவது சிறந்தது. தாமரை விதையில் இருக்கும் நார்ச்சத்து செரிமான பிரச்னைகளை போக்க உதவும்.
6. ஆரோக்கியமாக உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாமரை விதையுடன் பால் சேர்த்து சாப்பிடுவது சிறந்தது. தாமரை விதையில் குறைந்த கொழுப்பு அதிகமான நார்ச்சத்து உள்ளது. எனவே, இது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும்.
7. தாமரை விதையில் அதிகமாக கேல்சியம், பாஸ்பரஸ் உள்ளது. பாலில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இது இரண்டுமே எலும்பு வளர்ச்சிக்கும், எலும்பு வலிமை பெறவும் உதவும்.
8. மூளை செயல்பாட்டிற்கும், நினைவாற்றலை மேம்படுத்தவும் தாமரை விதையில் உள்ள மெக்னீசியம் உதவுகிறது. பாலில் உள்ள வைட்டமின் பி12, ரிப்போபிளோவின் (Riboflavin) மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
9. தாமரை விதையில் உள்ள Tryptophan என்னும் அமினோ ஆசிட் நம்மை ரிலாக்ஷாக வைத்து தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. Melatonin என்னும் ஹார்மோன் தூக்கம் வருவதற்கு உதவுகிறது. இது பாலில் இயற்கையாகவே உள்ளது. எனவே, தாமரை விதை மற்றும் பால் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது நல்ல தூக்கத்தை தூண்டும்.