உடலுக்கு நார்ச்சத்து தரும் ஆரோக்கிய நன்மைகளை அறிவோம்!

Benefits of fiber content
Benefits of fiber contenthttps://www.egypttoday.com

நார்ச்சத்து (Fiber) என்பது நாம் உண்ணும் உணவு ஜீரண மண்டலத்தை அடைந்த பிறகு, சிறப்பாக செரிமானம் நடைபெறவும், சத்துக்கள் உறிஞ்சப்படவும், மலக்குடல் வழியே கழிவுகள் வெளியேறவும் மிகவும் உதவி புரிபவை. மேலும், இவை கொழுப்பைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தவும், நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், எடை பராமரிப்பிற்கும் உதவுகின்றன. உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவிகரமாக விளங்கும் நார்ச்சத்துக்கள் அதிகமுள்ள ஏழு வகை உணவுகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

* புரோக்கோலி, பசலை, காலே, காலிஃபிளவர், கேரட், குடை மிளகாய் ஆகியவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும், இவற்றில் கலோரி அளவும் மிகவும் குறைவு.

* ராஸ்பெரி, ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி போன்ற பெரி வகைப் பழங்கள், ஆப்பிள், ஆரஞ்சு, பியர், கிவி ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம்; கலோரி அளவும் மிகக் குறைவு.

* பிளாக் பீன், கிட்னி பீன், கொண்டைக் கடலை மற்றும் பருப்பு வகைகளில் நார்ச்சத்தும் புரோட்டீனும் அதிகம். கலோரி அளவும் அதிகமுள்ளது.

* குயினோவா, பார்லி, ஓட்ஸ், புல்கூர் (Bulgur) கோதுமை போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கலோரி அளவும் குறைவா உள்ளது.

* ஏர் பாப்ட் பாப்கார்னில் நார்ச்சத்து அதிகம். இதில் பட்டர் அல்லது எண்ணெய் சேர்க்காமல் உட்கொண்டால் கலோரி அளவு குறையும்.

இதையும் படியுங்கள்:
நடுத்தர வயதை உற்சாகமாகக் கழிக்க சில யோசனைகள்!
Benefits of fiber content

* குறைந்த அளவு கொழுப்புச் சத்து உடைய க்ரீக் யோகர்ட் மற்றும் காட்டேஜ் சீஸில் புரோட்டீன் மற்றும் கால்சியம் சத்துக்களுடன் நார்ச்சத்தும் அதிகம் உண்டு.

* பாதாம், சியா, ஃபிளாக்ஸ் மற்றும் பூசணி விதைகளில் நார்ச்சத்தும் நல்ல கொழுப்புகளும் உள்ளன. கலோரி அளவும் அதிகம் உள்ளதால் குறைந்த அளவில் இதை உட்கொள்ளுதல் நலம் தரும்.

மேலே குறிப்பிட்ட உணவுகளை தேவையான அளவு தினமும் உட்கொண்டு சீரான செரிமானம் பெற்று சிறப்பாக வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com