Deep sleep
Deep sleep

ஆழ்ந்த உறக்கத்தின்போது நம் உடலில் நடப்பது என்ன?

Published on

பொதுவாக நாம் இரவில் நன்றாக தூங்கினால்தான் நம் உடலுக்கு மிகவும் நல்லது என்பார்கள். ஏனென்றால் அப்போதுதான் காலையில் புத்துணர்ச்சியோடு அந்நாளை எதிர்கொள்ள முடியும். ஆழ்ந்த தூக்கம் குறித்த நன்மைகள் எல்லாவற்றையும் காதில் வாங்கினாலும் ஏனோ நம் இன்றைய காலகட்டத்திற்கு செட் ஆகாமல் போய்விட்டது. உண்மையில் நிறைய பேர் அப்படிப்பட்ட நல்ல தூக்கத்தையே மறந்துவிட்டார்கள். நம்முடைய உடல் நலத்தை எப்படி காக்க வேண்டும் என்று நமக்குத்தான் தெரியும். அப்படி அதற்கு முன்னுரிமை கொடுக்காமல் வேறென்ன விஷயத்தை சாதிக்கப் போகிறோம். நல்ல ஆழ்ந்த தூக்கத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் சிலவற்றை பார்ப்போம்.

1. நினைவு ஆற்றல் அதிகரிக்கும்:

ஆழ்ந்த உறக்கமானது மூளையில் குளுக்கோஸ் உற்பத்தியை அதிகரிக்கிறது. குறுகிய கால மற்றும் நீண்ட கால நினைவாற்றல் மற்றும் ஏற்கனவே கற்ற விஷயங்களை நினைவில் வைத்திருக்க இது உதவுகிறது.

2. வளர்ச்சியின் ஆரம்ப கட்டம்:

Pituitary gland (மனித வளர்ச்சிக்கான ஹார்மோன்) போன்ற முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்க உதவுகிறது. இது ஒட்டுமொத்த உடலின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

3. செல்களின் மறுசீரமைப்பு:

உடலில் உள்ள செயலிழந்த செல்களுக்கு புத்துயிர் கொடுப்பதும் மற்றும் அதன் முழு மறுகட்டமைப்பு வேலைகளும் மனிதனின் ஆழ்ந்த உறக்க நிலையில் நடைபெறும்.

4. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுகிறது:

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உடல் ஆழ்ந்த தூக்கத்தைப் பயன்படுத்துகிறது. நோய் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் white blood cells உருவாகும் நேரமே நம் ஆழ்ந்த தூக்கத்தின்போதுதான்.

5. மூளை மற்றும் உடலின் சமநிலை:

அரைகுறை தூக்கம் போலல்லாமல், ஆழ்ந்த உறக்கம் என்பது உடல் மற்றும் மூளையில் நடக்கும் பரபரப்பான வேலைகளை அமைதிப்படுத்துகிறது. தசைகள் தளர்ந்து இதயத்துடிப்பின் மூலமாக வரும் சுவாசமும் மிக மெதுவாக இருக்கும். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும்.

இதையும் படியுங்கள்:
கோடைகால அலர்ஜி பிரச்சனை நீங்க இவற்றைப் பின்பற்றினாலே போதும்! 
Deep sleep

6. வெப்பநிலை ஒழுங்குமுறை:

மூளை மற்றும் உடல் குளிர்ச்சியடைகிறது. காரணம் தூங்கும் நேரத்தில் ரத்த ஓட்டம் சீரான வேகத்தில் செல்கிறது. இது ஆற்றலை சேமிக்கவும், மீட்டெடுக்கவும் உதவுகிறது.

7. இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம்:

Parasympathetic Nervous Systemதான் ஓய்வு மற்றும் செரிமானம் ஆகியவற்றை செயல்படுத்தும் நெட்வொர்க் என்று அறியப்படுகிறது. ஆழ்ந்து உறங்கும் நேரத்தில் ரத்த அழுத்தமும் சீராகி, இயல்பான அளவிலே இருக்கும்.

8. ஆற்றல் நிலைகளை அதிகரிக்கும்:

ஆழ்ந்த உறக்கத்தின்போது Adenosine triphosphate (ATP) அளவுகள் அதிகரிக்கும். (ATP என்பது செல்களுக்கான ஆற்றலை தரும் மூலமாகும்.)

இப்படிப்பட்ட நன்மைகளை நாம் பெற்றால்தான் ஒரு நாளை நம்மால் தெளிவாக மற்றும் புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும். அதற்கு நல்ல தூக்கம் மிகவும் அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com