
தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றுதான் இந்த இலுப்பை பூ சம்பா.
காவிரி டெல்டா பகுதிகளில் இது அதிகம் விளைகிறது. இலுப்பை பூவின் வாசனோடு ஒத்திருப்பதால் இந்த அரிசிக்கு இலுப்பை பூ சம்பா என்று பெயர் வந்தது.
இலுப்பை பூ சம்பா அரிசியில் வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீசு, ஜிங்க், வைட்டமின் பி, உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
இலுப்பைப்பூ சம்பா அரிசியை பெண்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த இலுப்பைப்பூ சம்பா அரிசியை சமைத்து சாப்பிடும்போது ஹார்மோன் சமநிலை பிரச்சினை சீராகும். கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
இலுப்பைப்பூ சம்பா அரிசியில் ஜிங்க் மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிக அளவில் இருப்பதால், இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் பருவ காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களில் இருந்து தப்பலாம்.
இலுப்பை பூ சம்பா அரிசி உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது, எனவே உடல் உஷ்ணம் அதிகமாக உள்ளவர்கள் இதை உட்கொள்ளலாம்.
இந்த அரிசியை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரிசியை உட்கொள்வதன் மூலம் பக்கவாதத்தின் பாதிப்பு அளவை வெகுவாகக் குறைக்க முடியும்.
இலுப்பை பூ அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயின் கடுமை தன்மை குறைகிறது.
இலுப்பை பூ அரிசி இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய நலனுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்க வல்லது.
வெள்ளை ரக அரிசியைக் காட்டிலும் இந்த இலுப்பைப்பூ சம்பா அரிசியில் நார்ச்சத்து மிக அதிகம். இது குடல் இயக்கத்தைச் சீராக்கி ஜீரணத்தை அதிகரிக்கும். இதனால் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வயிறு மந்தம் ஆகிய பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு பலவீனத்தை போக்கவும், வளரும் குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் உருவாகவும் இலுப்பைப்பூ சம்பா கஞ்சியை தரலாம்.
இதில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். குறிப்பாக பெண்கள் இதை சாப்பிட ரத்த சோகை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
பெண்கள் தொடர்ந்து இலுப்பை பூ அரிசி சாப்பிட்டு வந்தால், முடி உதிர்தலைக் குறைக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)