Liquid Diet.
Liquid Diet.

Oh My God! திரவ டயட் இருந்தால் உடல் எடையை வேகமாகக் குறைக்கலாமா? 

இப்போதெல்லாம் உடல் எடையைக் குறைப்பதற்கு பலவிதமான டயட் பிளான்கள் செயலில் இருக்கும் நிலையில், குறைந்த நாட்களிலேயே உடல் எடையை எந்த பக்க விளைவுகளும் இன்றி குறைப்பதற்கு திரவ டயட் பலன் கொடுக்கும் என்கின்றனர். அதாவது இந்த திரவ டயட்டில் குறைந்தது ஒரு வாரத்திற்கு திட உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. 

இந்த டயட் முறையை அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை மட்டுமே எடுக்க வேண்டும். அதிலும் மருத்துவர்களின் ஆலோசனை மிக மிக முக்கியம். ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப, டயட் இருக்கும் காலம் மாறுபடலாம். 

திரவ டயட்டில் என்ன சாப்பிட வேண்டும்? 

பொதுவாகவே திரவ டயட்டில் திட உணவுகளைத் தவிர்த்து திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக காய்கறிகளை வேக வைத்து அதை ஜூஸ் போட்டு குடிக்கலாம். இதன் மூலமாக உடலுக்குத் தேவையான மினரல்கள், விட்டமின்கள் போன்றவை கிடைக்கும். 

தினசரி உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்க போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தண்ணீருக்கு மாற்றாக இளநீர் குடித்தால் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்க உதவும். 

அதேபோல அதிகம் சர்க்கரை சேர்க்காமல் பிரஷ் ஜூஸ் குடிப்பது உங்களுடைய அன்றாட கலோரி தேவையை பூர்த்தி செய்ய உதவும். 

நன்மைகள்: இந்த முறையால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும். இந்த திரவ டயட்டில் பைபர், விட்டமின், மினரல் புரோட்டின் போன்றவை சரியான அளவுக்கு கிடைக்கிறது. அதே நேரம் இதில் சுத்தமாக கொழுப்பு இல்லை என்பதால் உடலில் இருக்கும் கொழுப்புகளை எரிக்க உதவும். குறிப்பாக உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற திரவ டயட் அதிகம் உதவுகிறது. 

தீமைகள்: என்னதான் இந்த வகை டயட் முறையில் நன்மைகள் இருந்தாலும், தீமையும் இருக்கத்தான் செய்கிறது. எனவே இந்த டயட் இருக்கு முயற்சிப்பதற்கு முன்பாக தகுந்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று முயற்சிப்பது நல்லது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்றாலும் நீண்ட காலத்திற்கு இந்த டயட் முறையை கடைப்பிடிப்பதால் சத்துக்கள் குறைந்து ஆரோக்கியக் குறைபாடு ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
மெடிடெரேனியன் டயட் என்றால் என்ன தெரியுமா?
Liquid Diet.

அதிகப்படியான உடற்பருமன் இருப்பவர்கள் இந்த டயட் முறையை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் உடல் எடையை விரைவாக குறைக்க விரும்புபவர்களும் நிச்சயம் இந்த டயட் முறையை பின்பற்றலாம். நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் உள்ளவர்கள் இதை முயற்சிப்பது மூலமாக ஆரோக்கியமான முறையில் உடலில் உள்ள கெட்ட விஷயங்கள் வெளியேற உதவும். தகுந்த மருத்துவரின் ஆலோசனை பேரில் இந்த திரவ டயட்டை முயற்சித்து பயன்பெறுங்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com