உடம்புக்குள்ள இருக்குற நச்சையெல்லாம் ஒரே இரவில் வெளியேத்தணுமா? ஒரே ஒரு 'மாகாளி' போதும்...

Magali kizhangu
Magali kizhangu
Published on

மலைகளிலும் நாடுகளிலும் விளைந்து, சித்த மருத்துவம் முதல் ஆயுர்வேதம் வரை அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் இந்த ஒரு வேரின் மகிமையை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! வெறும் கிழங்கு இல்லை... இது மாகாளிக் கிழங்கு அல்லது நன்னாரி! ரத்தத்தை சுத்திகரிப்பது முதல் மூட்டு வலி, நீரிழிவு நோய் வரை பல நோய்களை விரட்டும் மருத்துவக் குணங்கள் இதில் கொட்டிக்கிடக்கின்றன. உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, சோர்வை நீக்கி உற்சாகம் தர, ஏன்... உங்கள் வியர்வை நாற்றத்தைக் கூட விரட்ட இந்த 'அதிசய வேர்' எப்படி உதவுகிறது என்பதைப் பார்ப்போமா?

  • சரும ஒவ்வாமைக்கான மருந்தாக மாகாளிக்கிழங்கு செயல்படுகிறது.

  • சித்தமருத்துவத்தில் மாகாளி, பல தைலங்களிலும் லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது.

  • இதிலுள்ள சில வேதிப்பொருள்கள் மூட்டு வலியைக் குறைக்க உதவும்.

  • மாகாளிக் கிழங்கு, வேர் வகையைச் சேர்ந்தது என்பதால் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ரத்தக்கட்டு, வாதம், காயம், ரத்தச்சோகை, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கான மருந்துகளுடன் சேர்க்கப்படுகிறது.

  • மாகாளியை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரை அரை கப் காலை, அரை கப் மாலை குடித்து வர, நீரிழிவு நோய் விலகும்.  

  • உடலுக்கு ஊட்டத்தையும் உள்ளத்துக்கு உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய இயல்பு மாகாளிக்கிழங்குக்கு உள்ளது.

  • மாகாளி கிழங்கின் இலைகளை சாப்பிட்டு வந்தால், உடலில் வியர்வை நாற்றம் விலகி விடும்.

இதையும் படியுங்கள்:
சாதாரண முதுகுவலி அல்ல... கிட்னி பிரச்சினையின் அறிகுறி!
Magali kizhangu
  • மாகாளிக் கிழங்கு, நச்சுகளை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

  • மாகாளி கிழங்கை உலர வைத்து பொடித்து, ஒரு கப் பாலில் ஒரு ஸ்பூன் பொடியைக் கலந்து குடித்துவர சிறுநீர் மஞ்சளாக போவது மாறும். உடல் உஷ்ணம் குறைந்து, குளிர்ச்சி அடையும்.

  • மாகாளிக் கிழங்கு, பசியை அதிகரிக்கும்; செரிமானப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com