
முதுகுவலி வந்தாலே அதற்கு முதுகுதண்டு தான் பிரச்னை என்று நினைப்போம். ஆனால், 70 முதல் 80 சதவீதம் முதுகுவலிக்கு காரணம் முதுகில் உள்ள Spinal muscles மற்றும் Ligament ஆகும். குனிவது, நிமிர்வது, ஓடுவது போன்றவை செய்யும் போது நமக்கு உதவுவது இந்த Spinal Muscles தான். இதில் வரும் வலி தான் முதுகுவலி வர காரணம்.
நிறைய பேருக்கு Low back pain தான் அதிகம் இருக்கும். நம்முடைய முதுகுத்தண்டில் Lumber spine என்று ஒன்று உள்ளது. அது இயற்கையாகவே சின்ன Curve உள்ளது. உடல் எடை அதிகரிக்கும் போது இதனால் வலி ஏற்படும். எடை தூக்கும் போது சற்று குனிந்து தூக்குவது வலியை குறைக்க உதவும்.
நாம் தூங்கும் படுக்கை மிருதுவாகவும் இருக்கக்கூடாது, கடினமாகவும் இருக்கக்கூடாது. இரண்டிற்கும் இடைப்பட்ட படுக்கையாக இருக்க வேண்டும். படுத்து தூங்கும் போது பொஷிசன் மிகவும் முக்கியம்.
பைக் ஓட்டும் போது, ஆபிஸில் உட்கார்ந்து வேலை செய்யும் போது கூன் விழுந்த மாதிரி உட்காரக்கூடாது. லாங் டிரைவ், டெலிவரி வேலைகள் செய்பவர்கள் வண்டியை சற்று நேரம் ஓரம் நிறுத்தி ரெஸ்ட் குடுப்பதால் முதுகுவலி வருவதை தடுக்க முடியும்.
சிலருக்கு வேலையே உட்கார்ந்து பார்ப்பது போல இருக்கும். அவர்களுக்கு ஒரு சிம்பிளான வழியுள்ளது. ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீரை நிரப்பி வேலை செய்யும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை குடித்ததும் யுரின் வரும். அதற்கு எழுந்து சென்று விட்டு வந்தால் பாட்டிலில் தண்ணீர் காலியாகிவிடும்.
இதையே திரும்ப திரும்ப செய்யுங்கள். இப்படி சில வேலைகளை செய்து தான் நம் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள வேண்டும். கிட்னியில் கல் இருந்தாலோ அல்லது கிட்னியில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலோ கிட்னி வலிக்கும்.
ஒரே இடத்தில் வலி இருப்பது, யுரின் நிறம் மாறியிருப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால் கிட்னியில் பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள். எனவே, அடிக்கடி முதுகுவலி வந்தால் உடனே நல்ல மருத்துவரை சந்தித்து கிட்னியில் பிரச்னை இருக்கிறதா? என்று பரிசோதித்து பார்ப்பது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)