இத கவனியுங்க : லேசான பசியோடு தூங்கப் போனால்... என்ன ஆகும் தெரியுமா?

night eating habits
night eating habits
Updated on

உடலின் ஆரோக்கியத்திற்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் நாம் உண்ணும் உணவுகள் மிகவும் முக்கியம். ஒரு நாளின் சரிவிகித உணவே உடலை சரியாக பராமரிக்கிறது. காலை அதிகமாகவும், மதியம் மிதமாகவும், இரவு அதைவிட குறைவாகவும் சாப்பிடுவதே ஆரோக்கியம் . அந்த வகையில் இரவில் லேசான பசியோடு தூங்கப்போவதால் கிடைக்கும் நன்மைகள் (night eating habits) குறித்து இப்பதிவில் காண்போம்.

1. இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பாக லேசான பசி உணர்வுடன் செல்வதால் உடல் இயக்கம் மேம்படுகிறது. ஏனெனில் குடலில் செரிமானத்திற்கு தேவையான வேலைகள் சற்று பசியோடு இருக்கையில், எளிதாக நடைபெறும்.

2. லேசான பசியோடு இருக்கும்போது இரவில் கொழுப்புச்சத்து நன்கு எரிக்கப்பட்டு வளர்சிதை மாற்றங்களுக்கு  ஊக்குவிக்கப்படும். வயிறு புடைக்க சாப்பிட்டு படுக்கைக்கு செல்லும்போது, எவ்வித  இயக்கமும் இல்லாததால் உடல் செரிமானத்திற்கு திணறுவதோடு, வயிறு உப்புசம் தொடங்கி மலச்சிக்கல் வரை பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது.

3. நம் வளர்ச்சிதை மாற்றங்களை புரிந்து கொண்டு வயிறு நிரம்ப சாப்பிடாமல் வயிறை கொஞ்சம் காலியாக அதாவது அரை வயிற்றிற்கு சாப்பிட வேண்டும்.  பட்டினியாகவும் தூங்கக் கூடாது. உடலுக்கு சாப்பிட்ட திருப்தி இருப்பதோடு, கூடுதலாக இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற உணர்வு தோன்ற வேண்டும். பலவீனமாகவோ, கை நடுக்கத்துடனோ இருக்கக் கூடாது.

4. இரவில் லேசாக சாப்பிடும்போது நாம் உட்கொள்ளும் கலோரியின் அளவு சற்று குறையும். உடலில் போதுமான கலோரிகள் இல்லாதபோதுதான் ​​தங்களுக்கு தேவையான ஆற்றல் சக்தியை நாம் சேமித்துவைத்த கொழுப்பிலிருந்து  பெறத் தொடங்கும். இதனால் உடலிலுள்ள கொழுப்புச் சத்துக்கள் ஆற்றலாக மாறத் தொடங்கும். 

5. உடலில் கொழுப்பு சேராததால், செரிமானம் எளிதாகி மறுநாள்  புத்துணர்வோடு இருப்போம். பொதுவாக நாம் லேசான பசியில்  இருக்கும்போது, இன்சுலின் அளவு நம் உடலில் குறைய ஆரம்பித்து சேமிக்கப்பட்ட கொழுப்பை எளிதாக உடைக்கும்.

6. உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் ஆழ்ந்த தூக்கத்தின் போது, வெளியிடப்படுவதால் வளர்சிதை மாற்றங்கள் சீராகின்றன.இதனால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படும். வயிறு முழுவதும்  நிரம்பாமல் தூங்கும்போது, இரவு நேர தொந்தரவுகளான உப்புசம், குமட்டல், நெஞ்செரிச்சல் போன்றவை குறைந்துவிடும். இதனால் ஆழ்ந்த ஓய்வை பெறலாம்.

இதையும் படியுங்கள்:
கடவுள்களின் உணவு (Food of Gods) எது தெரியுமா?
night eating habits

7. இரவு உணவை 7:00 மணிக்கு சாப்பிட்டு, சாப்பிட்ட ஓரிரு மணி நேரம் கழித்து தூங்க செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒருவேளை இரவில் பசி எடுத்தால் ஹெல்தி ஸ்னாக்ஸ் ஆக வாழைப்பழம் அல்லது சில பாதாம் சாப்பிடலாம். 

இரவில் லேசான பசியோடு உறங்கச் செல்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதால் இதனை தொடர்ந்து கடைப்பிடியுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com