இனி, 'சீச்...சீ இது புளிக்கும்'னு சொல்லாதீங்க!

tamarind
tamarindImg Credit: Onlymyhealth
Published on

ஒரு துளி புளி நல்ல கிருமிநாசினி... புளியை சாப்பிட்டால் இந்த நோய் எல்லாம் உங்க பக்கம் வரவே வராது...

தென்னிந்திய சமையலில் புளியை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். இதுவரை இந்தப் புளி வெறும் சுவைக்காக மட்டும்தான்னு நினைச்சுட்டு இருந்தோம். ஆனால், குழம்பில் சேர்க்கும் புளியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. புளி ஒரு மலமிளக்கியாகவும், ஆன்டிசெப்டிக் மருந்தாகவும் செயல்படுகிறது. புளிக்கரைசலை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தாலே ஏகப்பட்ட பிணிகளை ஓட்ட முடியும்.

நமக்கு வருகின்ற ஆரோக்கிய கோளாறுகள், நாள்பட்ட அழற்சி, மெட்டா பாலிசம் பாதிப்புகளை போக்க புளி ஒன்றே போதும். புளியின் நன்மைகள் பற்றியும் அதன் ஊட்டச்சத்து அளவுகள் பற்றியும் கீழே காண்போம்.

ஊட்டச்சத்து அளவுகள்:

தினசரி நீங்கள் 100 கிராம் புளி வரை எடுத்துக்கொள்ளலாம். 100 கிராம் புளியில் கால்சியம் 7%, இரும்புச் சத்து 20%, விட்டமின் சி 6%, விட்டமின் ஏ 1%,  பொட்டாசியம் 13%, பாஸ்பரஸ் 16%, நார்ச்சத்து 13%.

புளியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், டார்டாரிக் அமிலம் போன்றவை நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கி மலம் கழித்தலை இலகுவாக்குகிறது.

உங்களுக்குத் தீராத வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் புளியமரத்து இலையைச் சாப்பிட்டால் குணமாகிவிடும் என்கின்றனர்.

நாள்பட்ட அழற்சியைப் போக்க புளியைப் பயன்படுத்தி டீ போட்டு, அதில் தேன் சேர்த்து, தினமும் குடித்து வரலாம். நல்ல முன்னேற்றம் தரும். புளியில் டீயா என்று யோசிக்காதீங்க. அது மிகவும் ஆரோக்கியமான விஷயமும்கூட. சுவையாகவும் இருக்கும்.

புளி ஒரு நல்ல கிருமிநாசினியாக செயல்பட்டு ஏராளமான நோய்கள் வருவதைத் தடுக்கிறது. மலேரியா, வைரஸ், பூஞ்சை தொற்றுகள் போன்ற நோய்த்தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது.

புளி நம்ம உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்து இதயத்தைக் காக்கிறது. அதே மாதிரி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதயத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலைக் கரைப்பதில் புளி மிக வேகமாகச் செயலாற்றும்.

இதையும் படியுங்கள்:
ஆவாரம் பூவை ‘ஏழைகளின் தங்கம்’ என்று ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா?
tamarind

தற்போதைய பாஸ்ட் புட் உணவுப் பழக்கத்தால் நமக்கு முதலில் பாதிக்கும் உறுப்பு இந்தக் கல்லீரல்தான். இந்தக் கல்லீரல்தான் உணவில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி செரிமான செயலை ஒழுங்காகவும் செயல்பட உதவுகிறது. உங்கள் கல்லீரலில் உள்ள  நச்சுத்தன்மையைப் போக்கி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க புளி ஒரு சிறந்த தேர்வு. ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்புகளை கல்லீரலில் இருந்து வெளியேற்றவும் இது உதவுகிறது.

குறிப்பு:

புளியை சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பால் பொருட்கள், க்ளூட்டன் வகை உணவுகளுடன் சேர்க்கக்கூடாது. அவை அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, உங்களுக்கு அழற்சி தரும் பொருட்களுடன் புளியைச் சேர்த்து சாப்பிடாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com