
காலை எழுந்ததும் அனைவரும் செய்யக்கூடிய காலைக் கடன்களுள் ஒன்று பல் துலக்குவது. அதற்கு எதுப்போன்ற பிரஷ் மற்றும் பேஸ்டி பயன்படுத்துவது என்று ஒருபக்கம் மக்கள் கேட்டாலும், இன்னும் சிலர் பேஸ்ட் பயன்படுத்துவது அவசியமா? என்று நினைக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் வேப்பங்குச்சி, ஆலங்குச்சியில் பல் துலக்கிக் கொண்டிருந்தோம். இதில் எது ஆரோக்கியம் என்ற குழப்பம் மக்களிடையே இருக்கிறது. அதைப்பற்றி விரிவாக காண்போம்.
எகிப்து நாட்டில் பலங்காலத்தில் சாம்பல் போன்றவற்றை பயன்படுத்தி பற்களை அந்த காலத்திலேயே சுத்தம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கி.பி 9 ஆம் நூற்றாண்டில் ஈரானில் தான் பேஸ்ட் போன்ற ஒன்றை கண்டுப்பிடித்துள்ளனர். சமீபத்தில் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் 19 ஆம் நூற்றாண்டில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பற்களில் இருக்கும் கிருமிகளையும், அழுக்குகளையும் நீக்குவதற்கு தான் பிரஷ் பயன்படுத்துகிறோம். பேஸ்டில் 10 முதல் 20 சதவீதம் Abrasives உள்ளது. Calcium carbonate, magnesium carbonate போன்றவற்றை பொதுவாக Abrasive ஆக பயன்படுத்துகிறார்கள். நுரை வருவதற்கு Sodium lauryl sulphate பயன்படுத்தப்படுகிறது. Fluoride குறிப்பிட்ட அளவு டூத்பேஸ்டில் இருக்கும். அது தான் பல் சொத்தையை தடுக்கக்கூடியது.
Fluoride ஐ நாம் பயன்படுத்தும் போது அது Fluorapatite காம்பவுண்டாக மாறுகிறது. இது பல் சொத்தை ஏற்படுத்தும் பேக்டீரியாவை கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீதம் குறைக்கிறது.
பல் சொத்தைக்கு முக்கிய காரணம் நாம் சாப்பிடக் கூடிய சர்க்கரை மற்றும் மாவுச்சத்து உணவுகளே ஆகும். மனிதன் மாவுச்சத்து மற்றும் சர்க்கரை உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது முதலாக தான் பல் சொத்தை பிரச்னை வரத்தொடங்கியது.
ஆலங்குச்சி மற்றும் வேப்பங்குச்சியை பயன்படுத்துவது பற்களில் உள்ள அழுக்குகளை எடுக்க கிருமிகளை நீக்க கண்டிப்பாக பயன்படும். ஆலங்குச்சி மற்றும் வேப்பங்குச்சியை பயன்படுத்தும் போது இயற்கையாக பற்களை சுத்தம் செய்து பேக்டீரியாவில் இருந்து பற்களை பாதுகாத்து ஈறுகளை வலுவாக்குகிறது, புத்துணர்ச்சியான சுவாசம், பல் சொத்தை, பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
இதை பயன்படுத்துவதன் மூலம் பற்களுக்கு ரசாயனம் இல்லாத இயற்கையான ஆரோக்கியத்தை தரும். உங்களுடைய உணவு முறை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், பல் சம்மந்தமான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)