'கோண்ட் கதிரா' என்பது asparagus செடியிலிருந்து எடுக்கப்படும் இயற்கை பிசின். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இது நீரில் ஊறப்போட்டால் ஜெல்லி போன்று ஆகும். இதில் குளிர்ச்சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பானங்களில் சேர்க்கப்படுகிறது. செரிமானம் மெடபாலிசம் சீராக்கி மற்றும் உடலை இது நீரேற்றமாக வைக்கிறது.
ஊறவைத்த சியாவிதைகளை தர்ப்பூசணி ஜுசுடன் சேர்ப்பதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. மேலும் சியா விதை மற்றும் கோண்ட் கதிரா தர்ப்பூசணியில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பார்ப்போம்.
உடல்சூட்டைத் தணிக்கிறது. மேலும் சியா விதை மற்றும் கோர்ட் கதிரா சேர்ப்பதால் நல்ல சுவை கிடைப்பதுடன் உடலில் வறட்சியைப் தடுத்து நல்ல நீரேற்றமாக வைக்கிறது.
தர்ப்பூசணியில் நீர்ச்சத்து, மற்றும் பொட்டாசியம் இருப்பதாலும், கோண்ட் கதிரா உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பதாலும் கோடையில் நல்ல வெயிலில் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை தவிர்க்கிறது.
கோண்ட் கதிராவில் செரிமானத்திற்கும் தேவையான பண்புகள் உள்ளதால் மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும் தர்ப்பூசணியின் நார்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தப்பூசணியில் ஏ சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் லைகோ பீன் போன்ற ஊட்டச் சத்துக்கள் உள்ளதால் நோயெதிர்ப்பு, சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.
எடைக் குறைப்பிற்கு மிகவும் ஏற்ற பானம் இது. சியா விதைகளின் புரதம் மற்றும் நார்சத்து, கோண்ட் கதிராவின் ஊட்டச்சத்து மற்றும் நீர்சத்து நிறைந்த தர்ப்பூசணி உடல் எடையை வெகுவாகக் குறைக்கும்.
இந்த பானம் சருமத்தில் அரிப்பு அழற்சியைப் போக்குவதால் நல்ல நிறத்தை தருகிறது. உடல் சிவத்தலை தடுக்கிறது.
உடலை மிக ஆரோக்கியமாக வைக்கும் ஊறவைத்த சியா விதைகள் மற்றும் கோண்ட் கதிரா சேர்த்து தர்ப்பூசணி ஜுஸ் குடித்து கோடை தாக்கத்திலிருந்து விடுபடலாம்.