மாயம் செய்யும் தர்பூசணி விதைகள்... இவ்வளவு நன்மைகள் இருக்கா?

 Watermelon Seeds
Watermelon Seeds

கோடைகாலத்தில் புத்துணர்ச்சியூட்டும் பழமாக தர்பூசணி இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பெரும்பாலான மக்கள் வெயில் காலங்களில் இந்த பழத்தை விரும்பி சுவைக்கின்றனர். ஆனால் அதில் இருக்கும் விதைகளை அப்படியே வீணாக துப்பி விடுகின்றனர். அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பற்றி பலருக்குத் தெரிவதில்லை. ஆம்! நான் சொல்வது உண்மைதான். தர்பூசணி விதைகள் பெரும்பாலும் தேவையில்லாத ஒன்றாகப் பார்க்கப்படுகின்றன. உண்மையில் அவற்றில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. 

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது: தர்பூசணி விதைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். அவற்றில் புரதம், ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. மேலும் இவற்றில் மக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களும் இருப்பதால், அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் தினசரி ஊட்டச்சத்துத் தேவை பூர்த்தியாகிறது.

இதய ஆரோக்கியம்: தர்பூசணி விதையைகள் இதயத்திற்கு ஆரோக்கியமானதாகும். குறிப்பாக இவற்றில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற நல்ல கொழுப்புகள் உள்ளன. இந்த ஆரோக்கிய கொழுப்புகள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவி, இதய நோய் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது. தர்பூசணி விதைகளில் உள்ள மெக்னீசியம் ரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுவதாக சொல்லப்படுகிறது. 

செரிமான ஆரோக்கியம்: ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு நார்ச்சத்து முக்கியமானது. தர்பூசணி விதைகளில் அதிக நார்ச்சத்து இருப்பதால், அவற்றை உணவில் சேர்ப்பது மூலமாக, செரிமானத்திற்கு உதவி, மலச்சிக்கல் பாதிப்புகளைக் குறைக்கிறது. 

இதையும் படியுங்கள்:
சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 முக்கிய வழிகள்!
 Watermelon Seeds

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: தர்பூசணி விதைகளில் பல விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையானவை. குறிப்பாக அவற்றில் இருக்கும் துத்தநாகம், நோய் எதிர்ப்பு செயல்பாட்டை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. துத்தநாகம் நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய்த் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் இதனால் காயங்கள் விரைவில் குணமாகும். 

முடி மற்றும் சரும ஆரோக்கியம்: தர்பூசணி விதைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் முடி மற்றும் சருமத்திற்கு நன்மையளிக்கும். இவற்றில் இருக்கும் நல்ல கொழுப்புகள் மயிர்க்கால்களை ஆரோக்கியமாக்கி, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. தர்பூசணி விதைகளில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுவதால், சரும பராமரிப்புக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com