செரிமானம் முதல் நீரிழிவு வரை குணமாக்கும் வெற்றிலை!

வெற்றிலைக்கொடி
வெற்றிலைக்கொடி
Published on

வெற்றிலையை நம்மில் பலரும் பூஜைக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், வெற்றிலையில் எவ்வளவு நன்மைகள் உள்ளன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இயற்கை மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பல மருத்துவ குணமுள்ள மரங்கள் மற்றும் தாவரங்கள் நம்மைச் சுற்றிலும் காணப்படுகின்றன. மருத்துவ குணமுள்ள தாவரங்கள் நமது உடலின் பல்வேறு பிரச்னைகளுக்கு நிவாரணம் அளித்து, நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இப்படிப்பட்ட முக்கியமான மருத்துவ குணமிக்க தாவரங்களில் ஒன்றுதான் வெற்றிலை.

வெற்றிலை மற்றும் இந்தத் தாவரத்தின் வேர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அற்புதமான மருத்துவ குணங்கள் காரணமாக பாரம்பரிய மருத்துவத்திலும் வெற்றிலை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வெற்றிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

வெற்றிலை மற்றும் அதன் வேர்கள் நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க பயன்படுகின்றன. நம் நாட்டிலும், வெளிநாட்டிலும் மருத்துவ நோக்கங்களுக்காக வெற்றிலை பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாடு நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. வெற்றிலையை வளர்க்க பெரிய அல்லது தனி இடம் தேவை இல்லை. வெற்றிலை வேர் குச்சியை மண்ணில் நட்டு வைத்தாலே அது முளைத்து, அருகில் உள்ள மரங்கள் அல்லது சுவற்றை பற்றி கொண்டு வளரும் தன்மை கொண்டது.

வெற்றிலைக் கொடியின் வேரானது தொண்டை சார்ந்த நோய்கள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் குரல் வளத்தை இனிமையாக்க உதவுகிறது. பிரபல ஆயுர்வேத மருத்துவர் ராகவேந்திர சவுத்ரி கூறுகையில், ‘எங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருளாக இருக்கும் வெற்றிலை பல நோய்களுக்கான சிகிச்சையில் முக்கியப் பயன்பாடாக உள்ளது’ என்று கூறினார். மேலும், ‘அடிக்கடி வெற்றிலை எடுத்துக் கொள்வதால் ஜீரண சக்தி பலப்படும். இது சளி தொல்லை மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. தவிர இதயம் தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்த வெற்றிலை உதவுவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நீரோட்டம் உள்ள இடத்தை அறிய கையாளும் வழிமுறைகள்!
வெற்றிலைக்கொடி

நீரிழிவு நோயாளிகளுக்கும் கூட வெற்றிலை நன்மை அளிக்கும் தன்மை கொண்டது. சிறுநீர் கோளாறுகளையும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளதாகவும் பல் நோய்கள், ஈறு சிதைவு மற்றும் பையோரியா ஆகியவற்றிலிருந்தும் வெற்றிலை நிவாரணம் அளிக்கிறது மற்றும் பற்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்கிறது.

சிலர் வெற்றிலையை பல வழிகளில் பயன்படுத்துகிறார்கள்’ என்று குறிப்பிட்ட ராகவேந்திர சவுத்ரி, ‘வெற்றிலையை தண்ணீருடனோ, வெற்றிலையை சாறு எடுத்தோ அல்லது வெற்றிலை வேரை பொடி செய்து பல் மற்றும் ஈறுகளில் பூசுவது என வெற்றிலை மற்றும் அதனை வேர்களை பல பயனுள்ள வழிகளில் பயன்படுத்தலாம்’ என்று குறிப்பிட்டார். சுருக்கமாகச் சொன்னால் வாய் ஆரோக்கியம் முதல் செரிமான பிரச்னைகள், சுவாச பிரச்னை, இருமல், சளி என பலவற்றுக்கு வெற்றிலை ஒரு அருமருந்தாக விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com